Top
undefined
Begin typing your search above and press return to search.

இது ஒன்றும் ஐரோப்பா, அமெரிக்கா அல்ல: இந்திய பொருளாதாரம் ஒரு போதும் வீழாது! இ.சி.ஜி.சி தலைவர் பேச்சு.!

இது ஒன்றும் ஐரோப்பா, அமெரிக்கா அல்ல: இந்திய பொருளாதாரம் ஒரு போதும் வீழாது! இ.சி.ஜி.சி தலைவர் பேச்சு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2019 6:17 AM GMT


கோவை மாவட்டம் அவினாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய 'இ.சி.ஜி.சி.,' எனும், ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கீதா முரளிதர் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் உள்ளது,'' என, கூறினார்.


அவர் கூறியதாவது:அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் தான், பொருளாதார மந்தநிலை, அதிகளவில் உள்ளது. இதற்கு, அரசியல் மாற்றம், அரசின் கொள்கை முடிவு, சட்ட திட்டம் போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும். நமது நாட்டில், அத்தகைய நிலையில்லை. அதனால் இந்திய பொருளாதாரம் ஒருபோதும் வீழாது.


இ.சி.ஜி.சி.,யில் சேவை பெறும் முறை எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனத்தினர், உரிய ஆவணங்களை, சரியான முறையில் சமர்ப்பிக்கும் போது, நிறுவனத்தின் சேவையை தடையின்றி பெற முடியும்.உலகளவில் பொருளாதார வீழ்ச்சி, மந்தநிலை தென்படுகிறது. அதேசமயம், இந்திய பொருளாதாரம், வளர்ந்து வருகிறது. ஏற்றுமதியிலும், நமது நாட்டின் பங்கு தடை இல்லாமல் உயர்ந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


Next Story