Kathir News
Begin typing your search above and press return to search.

"நவமி கங்கா" திட்டத்துக்காக ஏலத்தில் விடப்பட்ட பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள் : ஒரே நாளில் பல கோடிக்கு விற்பனையான சாதனை.!

"நவமி கங்கா" திட்டத்துக்காக ஏலத்தில் விடப்பட்ட பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள் : ஒரே நாளில் பல கோடிக்கு விற்பனையான சாதனை.!

நவமி கங்கா திட்டத்துக்காக ஏலத்தில் விடப்பட்ட பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள் : ஒரே நாளில் பல கோடிக்கு விற்பனையான சாதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2019 4:20 AM GMT


பிரதமர் கலந்து கொள்ளும் அரசு விழாக்களின் போதும், முக்கிய நிகழ்ச்சிகளின் போதும் நினைவு பரிசுகள் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக கொடுக்கப்பட்ட பொருட்கள் மின்னணு முறையில் ஏலத்திற்கு விடப்பட்டன. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகை முழுவதும் "நவமி கங்கா" திட்டத்துக்காக செலவிடப்பட உள்ளது.


முன்னதாக இந்த நினைவு பரிசுகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. இதில் ஓவியங்கள், சிற்பங்கள், பொன்னாடைகள், புத்தகங்கள் என்று பல்வேறு நினைவு பரிசுகள் இடம்பெற்றிருந்தன. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், மின்னணு முறையில் அனைத்து நினைவு பரிசுகளும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.


மொத்தம் 2772 பொருட்கள் இதுவரையில் விற்பனையாகியுள்ளன. ஏற்கனவே ஏலத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட போதிலும், மக்கள் பங்கேற்பு அதிக அளவில் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், ஏல தேதி தள்ளிவைக்கப்பட்டது.


இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர்கள் என்று பலரும் பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர். காட்சியில் இருந்த பரிசுப்பொருட்களில் சிறிய விநாயகர் சிலை மற்றும் தாமரை வடிவத்திலான கலை நயம் மிக்க மரப்பெட்டி போன்றவற்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிரதமர், மகாத்மா காந்தியுடன் தோன்றும் தேசியக்கொடி பின்னணியில் உள்ள அக்ரிலிக் ஓவியத்துக்கு அதிகபட்ச விலையாக ரூ.2.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஓவியம் இறுதியில் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.


பிரதமர் தனது தாயிடம் ஆசி பெறுவதைச் சித்தரிக்கும் சட்டமிடப்பட்ட புகைப்படத்துக்கு ஆதார விலை ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அது ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. மணிப்பூரி கிராமியக்கலை (நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.50,000. ஏலத்தொகை ரூ.10 லட்சம்), பசு தனது கன்றுக்கு பால் தருவதை சித்தரிக்கும் உலோக சிற்பம் (நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.4,000, ஏலத்தொகை ரூ.10 லட்சம்), சுவாமி விவேகானந்தரின் 14 சென்டிமீட்டர் உயர உலோக சிலை (நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.4,000 பெற்ற ஏலத்தொகை ரூ.6 லட்சம்) உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, ஏலத்தில் விடப்பட்டன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News