Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் பிரம்மாண்ட தீப உற்சவம்! 5. 50 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை! #Deepotsav2019

அயோத்தியில் பிரம்மாண்ட தீப உற்சவம்! 5. 50 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை! #Deepotsav2019

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Oct 2019 5:29 AM GMT


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், கங்கை நதிக்கரையில் ராம் கி பைதி என்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு நேற்றிரவு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சுமார் ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட்டன, இந்த நிகழ்வில் மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் தீப ஆராதனைகளில் பங்கேற்றனர். 5.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஆற்றில் மிதந்த கண்கொள்ளா காட்சி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.


தீப உற்சவத்தையொட்டி அங்கு கண்கவரும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பிஜி தீவின் அமைச்சரான வீணா குமார் பட்நாகர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மங்கலபவன் அமங்கல் ஹரி என பிரசித்திபெற்ற பக்தி பாடலை பாடினார்.




https://twitter.com/airnewsalerts/status/1188082180028682240?s=20


அயோத்தி நகரம் முழுவதும் பல்வேறு வீடுகள், கோவில்களில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டன, சரயு நதியில் தீபம் ஏற்றி விடும் பணியில் சுமார் 5 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கின்னஸ் சாதனையை பதிவு செய்ய ஒரு குழுவினரும் அயோத்தியில் முகாமிட்டனர். அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் இந்த தீப உற்சவ விழாவில் பங்கேற்றனர்.


இந்த தீப உற்சவம் விழாவுக்காக அம்மாநில அரசு 30 லட்ச ரூபாய் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story