Top
undefined
Begin typing your search above and press return to search.

யோகா ரத்னா பத்மஸ்ரீ நானம்மாள் தனது 99-வது வயதில் கோவையில் காலமானார்!

யோகா ரத்னா பத்மஸ்ரீ நானம்மாள் தனது 99-வது வயதில் கோவையில் காலமானார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Oct 2019 5:35 AM GMT


கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த நானம்மாள். இவர் 8 வயது சிறுமியாக இருக்கும்போது தனது தந்தையிடமிருந்து யோகாசனம் கலையை கற்றுத் தேர்ந்தார். சுமார் 90 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டதுடன் பலருக்கும் யோகாசனம் பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்தார். இதனிடையே இவரின் திறமையும் சேவையும் பாராட்டி மத்திய மோடி அரசு கடந்த 2018-ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.


இது கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டில் மகளிரின் வலிமை என்னும் பொருள்படும் 'நரி சக்தி' விருது மற்றும் 2017-ஆம் ஆண்டில் 'யோகா ரத்னா' விருது ஆகியவற்றை பெற்றுள்ள நானம்மா ‘யோகா பாட்டி’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஊடகங்களில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தார்.


இந்நிலையில், சமீப நாட்களாக வயோதிகம் சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நானம்மாள் தனது 99-ஆம் வயதில் கோவையில் நேற்று(26.10.2019) காலமானார்.


Next Story