Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரள பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் கவர்னராக நியமனம்!

கேரள பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் கவர்னராக நியமனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Oct 2019 5:41 AM GMT


கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை, மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். கோழிக்கோடு அருகே உள்ள வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் பிள்ளை.


இவர் பாரதிய ஜனதா தலைவராக பதவி ஏற்ற பிறகு தான் கேரளாவில் சபரிமலை ஐயப்பன் ஆலயம் தொடர்பான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி கட்சி மேலிடத்தின் பாராட்டை ஸ்ரீதரன் பிள்ளை பெற்றார் என கூறப்படுகிறது.


மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மிசோரம் மாநில கவர்னராக ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டு உள்ளார்.


ஏற்கனவே கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக இருந்த கும்மனம் ராஜசேகரன், மிசோரம் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். சில காலம் கவர்னர் பதவி வகித்த அவர் மீண்டும் கேரள அரசியலுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததால் அவர் கவர்னர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரிடம் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.


Next Story