Top
undefined
Begin typing your search above and press return to search.

தீபாவளி கொண்டாட தடை? குறிப்பிட்ட சமூகத்தினர் மீது திரைப்பட நடிகர் போலீசில் புகார்!

தீபாவளி கொண்டாட தடை? குறிப்பிட்ட சமூகத்தினர் மீது திரைப்பட நடிகர் போலீசில் புகார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2019 2:12 AM GMT


மும்பை திரை உலகிலும் , தொலைக்காட்சியிலும் சீரியல் நடிகராக இருப்பவர் விஸ்வ பானு. இவர் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மும்பை மலாட் பகுதியில் வசித்து வருகிறார்.


இவர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.


அந்த மனுவில் "தீபாவளிக்கு நாங்கள் கடைபிடிக்கும் இந்து பழக்க வழக்கப்படி வீட்டு முன்பகுதியில் வீட்டை ஒளிரச் செய்ய விளக்குகளை என் மனைவி ஏற்றினார். வீட்டு முன்பாக கோலம் வரைந்து அதன் மத்தியில் தீபம் ஏற்றினார். ஆனால், அங்குள்ள கும்பல் ஓன்று இந்தப் பகுதியில் விளக்குகள் ஏற்றக் கூடாது என்று கூறி தடை செய்ததால் நாங்கள் தீபாவளி விளக்குகளை அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சென்ற இஸ்லாமியர்களின் பக்ரா ஈத் பண்டிகை அன்று அவர்கள் எங்கள் வீட்டு முன்பாக தெருவில் வைத்து ஆடுகளை வெட்டியதாகவும், அப்போது நாங்கள் கதவை சாத்திக் கொண்டதால் கோபம் அடைந்த அவர்கள் கதவை திறந்து வைக்கக் கோரி கட்டயப்படுத்தியதாகவும், நாங்கள் இந்துக்கள் என்பதால் அடிக்கடி அவர்களால் கேலி செய்யப்படுவதாகவும் வருத்தத்துடன் புகாரில் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறுகையில் "சமய சகிப்புத்தன்மை இல்லாதவர்களால் இன்று எங்களால் பண்டிகை கொண்டாட முடியவில்லை. தீபாவளியை முன்னிட்டு விளக்குகள் கூட ஏற்ற அனுமதிக்கப்படவில்லை, இத்தகைய செயல்களால் நாங்கள் வீட்டை காலி செய்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.




https://www.facebook.com/vishwa.bhanu.9/posts/10206149752379557


Content Credits - OpIndia.com


Next Story