Top
undefined
Begin typing your search above and press return to search.

"தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடுவது பாரம்பரியம், நீங்கள் தான் என் குடும்பம்!" இராணுவ வீரர்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடுவது பாரம்பரியம், நீங்கள் தான் என் குடும்பம்! இராணுவ வீரர்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2019 2:19 AM GMT


இந்திய பாகிஸ்தான் எல்லையில் இராணுவ வீரர்களுடன் இந்த ஆண்டும் தீபாவளியைக் கொண்டானார் பிரதமர் மோடி. கடந்த ஆண்டுகளிலும் அவர் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.




https://twitter.com/narendramodi/status/1188412301524852736?s=20


காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளியை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவது ஒரு பாரம்பரியம். அதை இராணுவ வீரர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஆகவே இங்கு வந்துள்ளேன். நீங்கள் தான் என் குடும்பம். நாட்டில் பல எல்லைப்பகுதிகள் உள்ளன.




https://twitter.com/narendramodi/status/1188413200078905344?s=20


ஆனால் நீங்கள் இருக்கும் இந்த பகுதி தனித்துவமானது. போர், ஊடுருவல் உட்பட அனைத்தையும் அனுபவிக்க வேண்டி இருக்கும். இந்த பகுதி தோல்வியை பார்த்திராத பகுதி. எதிரிகள் வெல்ல முடியாத பகுதி. தற்போது நேரம் மாறி விட்டது. நமது ஆயுதப்படைகள் நவீனமாக இருக்க வேண்டும். நமது ஆயுதங்களும் வெடிமருந்துகளும் நவீனமாக இருக்க வேண்டும். நமது வீரர்களின் முகங்களில் எந்த விதமான அழுத்தங்களும் இருக்க கூடாது" என்று பேசினார். இவரின் பேச்சு இராணுவ வீரர்களை நெகிழ வைத்துள்ளது.




https://twitter.com/narendramodi/status/1188415650055802880?s=20

Next Story