Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐந்தாண்டுகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீடு - வளர்ச்சிக்கு வித்திடும் எஃகு உற்பத்தி!

ஐந்தாண்டுகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில்  ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீடு - வளர்ச்சிக்கு வித்திடும் எஃகு உற்பத்தி!

MuruganandhamBy : Muruganandham

  |  28 Oct 2019 11:59 AM GMT


இந்தியாவின் எஃகு தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடுத்து இந்தத் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


டோக்கியோவில் நடைபெற்ற அதிகப்படியான எஃகு தேவை பற்றிய உலக அமைப்பின் அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவில் துரிதமான பொருளாதார வளர்ச்சியும், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடும் இருப்பதால், எஃகின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.


அடுத்த ஐந்தாண்டுகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு செலவிட இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். 2030 ஆம் ஆண்டுக்குள் தனிநபர் எஃகு பயன்பாட்டின் அளவை தற்போதுள்ள 72 கிலோகிராம் என்பதை 160 கிலோகிராமாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


Next Story