Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐரோப்பாவும், இந்தியாவும் இணைந்து பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் - பிரதமர் மோடி!

ஐரோப்பாவும், இந்தியாவும் இணைந்து பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் - பிரதமர் மோடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Oct 2019 7:03 AM GMT


பிரதமர் மோடியுடன் 28 ஐரோப்பிய யூனியன் எம்.பி-க்கள் சந்தித்து, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் மோடி பேசுகையில், ஐரோப்பாவும், இந்தியாவும் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுப்போம் என தெரிவித்தார்


எம்.பி-க்களுடன் மோடி கலந்துரையாடிய போது கூறியதாவது: ஐரோப்பாவுடன் இந்தியா நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. இருநாடுகளுக்கு இடையே வர்த்தக தொடர்பு எப்போதும் இருந்து வருகிறது. நாம் இணைந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவோம். அதற்கு, அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு வேரறுப்போம்.




https://twitter.com/narendramodi/status/1188799546941329408?s=19


காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு பின், அங்குள்ள கள நிலவரத்தை அறிவதற்காக 28 பேர் கொண்ட ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 28 எம்.பி குழுவினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தனர். இவர்கள்இன்று(29 அக்டோபர் 2019) காஷ்மீர் செல்ல இருக்கின்றனர்


Next Story