Top
undefined
Begin typing your search above and press return to search.

சுர்ஜித் மீட்பை பரபரப்பாக்கி மக்களை கட்டிப்போட்ட ஊடகங்கள், தூத்துக்குடியில் துடிதுடித்து இறந்த மற்றொரு குழந்தை! யார் காரணம்?

சுர்ஜித் மீட்பை பரபரப்பாக்கி மக்களை கட்டிப்போட்ட ஊடகங்கள், தூத்துக்குடியில் துடிதுடித்து இறந்த மற்றொரு குழந்தை! யார் காரணம்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Oct 2019 3:21 AM GMT


சுர்ஜித் இறப்பின் துயரம் ஓய்வதற்குள்ளேயே மற்றொரு சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை கூர்ந்து தொலைகாட்சியில் பார்த்து வந்த பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு கதி நடக்கும் என கனவிலும் நினைத்து இருக்க மாட்டர்.


தூத்துக்குடி மாவட்டம் தெரசபுரத்தில் வசிப்பவர் மீனவர் லிங்கேஸ்வரன். லிங்கஸ்வரன் மனைவி நிஷாவின் இரண்டு வயது பெண் குழந்தை ரேவதி சஞ்சனா.


பெற்றோர் தொலைகாட்சியில் பரபரப்பாக சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை பார்த்து வந்த போது, இரண்டு வயது ரேவதி தனது வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, கேட்பார் அற்று துடிதுடித்து இறந்துள்ளார்.


சில நேரம் கழித்து குழந்தை காணவில்லை என அனைவரும் தேடவே, குழந்தையின் தந்தை குளியலறையில் சென்று பார்க்க, குழந்தையின் ஒரு கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது. ரேவதியை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது.








துயர சம்பவத்தை பரபரபாக்கி, மக்களை உளரீதியாக கட்டிப்போட்டு TRP ரேட்டிங்கை உயர்த்த துடிக்கும் டி.வி சேனல்கள் பொறுப்பாக நடந்துக் கொள்கின்றனவா என சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


Next Story