Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு வேளை சாப்பாடு இலவசம்! நகர்ப்புற மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.!

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு வேளை சாப்பாடு இலவசம்! நகர்ப்புற மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.!

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு வேளை சாப்பாடு இலவசம்! நகர்ப்புற மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2019 6:30 AM GMT


ஒரிசா மாநிலத்தில் உள்ள நகரங்களில் நகர்ப்புற ஏழை மக்களுக்காக ‘ஆஹார்’ என்ற திட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. இதன்படி ஏழை மக்களுக்கு ரூ. 5 கட்டணத்தில் சாம்பார் சாதம் பருப்பு சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பும் உள்ளது.


இந்த நிலையில், இந்த திட்டத்துடன் இணைந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆங்காங்கு கால்வாய்களிலும், நீர்நிலைகளிலும் அடைத்துக் கொண்டிருக்கிற பிளாஸ்டிக் குப்பைகளை வெளியேற்றவும் ‘கோட்பேட் கவுன்சில்’ என்ற அரசு சார்ந்த தொண்டு நிருவனம் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் மக்களுக்கு, ஒருவேளை உணவை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இத்திட்டத்தின் படி ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வருபவர்களுக்கு இலவச முழு சாப்பாடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


இது தொடர்பாக அந்த அமைப்பின் முதன்மை அதிகாரி அலோக் சமன்தராய் கூறியதாவது:
இந்த திட்டம் இந்த நகரம் பாலிதின் கழிவுகள் இல்லாத நகரமாக அடுத்த சில வாரங்களில் மாற்றப்பட்டு விடும். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் பேனர்கள், விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. நல்ல வரவேற்புள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


இந்த திட்டத்தால் ஏழை நகர்புரமக்கள் வயிறார சாப்பிட வழி ஏற்பட்டுள்ளதாகவும், அக்குடும்ப பெண்களுக்கு சமையல் செய்யும் பணிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.Â




https://odishasuntimes.com/get-free-food-in-exchange-for-plastic-waste-in-odishas-kotpad/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News