Top
undefined
Begin typing your search above and press return to search.

ரயில்வே நடைமேடையில் டீ விற்றவன் நான்! பிரதமர் நரேந்திர மோடி சவுதியில் உரை !!

ரயில்வே நடைமேடையில்  டீ விற்றவன் நான்! பிரதமர் நரேந்திர மோடி சவுதியில் உரை !!

saravanaBy : saravana

  |  30 Oct 2019 6:46 AM GMT


பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதி சென்றடைந்தார். சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியாவுக்கு சென்றார். கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் வரவேற்றார்.
சவுதி அரேபியாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர் கடந்து வந்த பாதையை பற்றி கூறினார் அவர் கூறியதாவது.


எனது குடும்பம் அரசியல் சார்ந்தது கிடையாது எனக்கு எந்த வித அரசியல் பின்னணியும் இல்லை ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவன். ரயில்வே நடைமேடையில் டீ விற்றவன்நான். அது எனது பயணத்தில் மிகப்பெரும் பகுதியாகும், நான் வறுமையை பற்றி அடுத்தவர் சொல்லியோ புத்தகத்திலிருந்தோ படித்தது இல்லை வறுமையோடு தான் வாழ்ந்து வந்தவன். ரயில்வே நடைமேடையில் டீ விற்று தான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன் என கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.


இன்னும் சில காலங்களில் இந்தியா வறுமையை ஒழித்து அதில் வெற்றி பெறும் . வறுமையை ஒழிப்பதற்கான போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. ஏழைகளுக்கு அதிகாரத்தை அளிப்பது தான் இந்தியாவின் குறிக்கோள் ஆகும்.


இவ்வாறு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்!


Next Story