Top
undefined
Begin typing your search above and press return to search.

‘ரூபே அட்டை' சவூதி அரேபியாவில் புழக்கத்துக்கு வந்தது!! பிரதமர் மோடியின் முயற்சியால் இந்திய தொழில் நுட்பத்துக்கு உலக அளவில் அங்கீகாரம்.!

‘ரூபே அட்டை சவூதி அரேபியாவில் புழக்கத்துக்கு வந்தது!!  பிரதமர் மோடியின் முயற்சியால் இந்திய தொழில் நுட்பத்துக்கு உலக அளவில் அங்கீகாரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2019 5:43 AM GMT


உலகெங்கும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வசதிக்காகவும், இந்திய பணமதிப்பை அதிகரிக்கும் வகையிலும் ரூபே கார்டு வசதிகளை பிரதமர் மோடி அரசு அந்தந்த நாட்டு அனுமதியுடன் செயல்படுத்தி வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள், பன்னாட்டு வணிகர்கள் விரும்பி இந்த அட்டையை பயன்படுத்தி வருகின்றனர்.


சிங்கப்பூர், மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகள் ரூபே பயன்படுத்தும் நாடுகளில் முதலிடம் வகித்து வருகின்றன. அமெரிக்காவின் விசா, மாஸ்டர் கார்டுக்கு போட்டியாக உலகம் முழுவதும் ரூபே கார்டு உருவெடுத்து வருகிறது.


ரூபே பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளின் பலனாக டிஸ்கவர், ஜப்பான் கிரெடிட் பீரோ மற்றும் சீனா யூனியன் பே போன்ற அமைப்புகளும் இந்திய ரூபே இருப்பை அதிகரிக்க உதவி வருகின்றன.


இதுவரை 25 மில்லியன் ரூபே அட்டைகள் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் இது ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் தின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி திங்கள் கிழமை இரவு சவூதி சென்றார். இரு நாட்டு உறவுகள் வளர்ச்சி தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்போது மன்னரின் அனுமதி பெற்று சவூதி அரேபியாவிலும் ரூபே அட்டைகள் பயன்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


இது வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இது நல்ல வசதியை ஏற்படுத்தும். இந்திய செலாவணியின் மதிப்பும் உயரும். பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாக பன்னாட்டு சந்தையில் டாலருக்கு மாற்றாக இந்திய பணம் ரூபே வடிவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இப்போது 195 நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டையாக உள்ளது. மேலும் சவூதி அரசு இந்திய ரூபே அட்டையை ஏற்றுக் கொண்டதன் மூலம் இந்தியாவின் பணப்பரிமாற்ற தொழில் நுட்பத்திறனின் மதிப்பு உலக அளவில் உயர்ந்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. 


Translated Article From TFI POST


Next Story