Top
undefined
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை ! ஆசிரியர் சாபு ஆபிரகாம் கைது !

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை ! ஆசிரியர் சாபு ஆபிரகாம் கைது !

saravanaBy : saravana

  |  30 Oct 2019 7:25 AM GMT


நீலகிரி கூடலூரில் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பள்ளியில் பணிபுரியும் கரேத்தே வகுப்பு பயிற்சியாளர் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார் . மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடமும் அங்கு உள்ள தேவாலய நிர்வாகத்திடமும் புகார் அளித்துள்ளார். அதற்கு நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் தேவாலய நிர்வாகம் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க முற்பட்டுள்ளார்.


மாணவியின் தாய் ஆனால் மாணவியின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த மாணவிக்கு கரேத்தே ஆசிரியர் மீண்டும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.மனைவியின் தாய் காவல்துறையிடம் கூற சென்ற போது அவரது கணவர் மற்றும் அவரின் சகோதரர்கள்,நண்பர்கள் மாணவியின் தயை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கைகலப்பாக மாறியது. இந்த கைகலப்பில் மாணவிக்கு காதில் அடிபட்டது.


பின் அந்த மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக கூடலூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு மாணவியின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தது.



பாலியல் தொந்தரவு கொடுத்த கராத்தே ஆசிரியர் சாபு ஆப்ரகாமையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தது காவல்துறை


Next Story