Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க.வின் முப்பெரும் விழா! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க.வின் முப்பெரும் விழா! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு!

saravanaBy : saravana

  |  31 Oct 2019 9:29 AM GMT


இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் படேலின்பிறந்த தினம் இன்று இதை நாடு முழுவதும் பா.ஜ.க வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி தமிழக பாரதிய ஜனதா கட்சி முப்பெரும் விழாவாக கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி க்கு பாராட்டு விழா சங்கல்ப பாத யாத்திரை நிறைவு விழா இரும்பு மனிதர் படேல் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.


இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மாநில துணைத்தலைவர்கள் பி.டி அரசகுமார், MN ராஜா கோட்டப்பொறுப்பாளர் சக்கரவர்த்தி நடிகை கௌதமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சென்னை அமைந்தகரை பகுதியில் நடைபெற்றது. செனாய் நகர் வழியாக பேரணி சென்று படேல் மற்றும் காந்தி படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story