Top
undefined
Begin typing your search above and press return to search.

முன்னாள் பெண் மேயர் உட்பட 3 பேர் கொலை.! தி.மு.க மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச்செயலாளர் கைது!

முன்னாள் பெண் மேயர் உட்பட 3 பேர் கொலை.!  தி.மு.க மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச்செயலாளர் கைது!

saravanaBy : saravana

  |  31 Oct 2019 6:33 AM GMT


ல மாதங்களுக்கு முன் தி.மு.க வின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரின் கணவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் உமா மகேஸ்வரி தான் திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ஆவர்.


முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீட்டின் பணிப்பெண்ணாக இருந்தவர் மாரி இவர் கொலை நடந்த அன்று மேயர் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்த உமா மகேஸ்வரி அவரது கணவர் முருகசங்கரன் கிடந்ததை கண்டு அலறி கொண்டு வெளியே செல்ல முற்பட்டுள்ளார்.அப்போது அங்கு ஒளிந்திருந்த கொலையாளிகள் பணிப்பெண் மாரியையும் கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து மேலப்பாளையம் காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டது விசாரணையில் தி.மு.க மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச்செயலாளர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனை கைது செய்தது.


இந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றியது தமிழக அரசு


சி.பி.சி.ஐ.டி. கண்காணிப்பாளர் விஜயகுமார், தலைமையில் விசாரணை மேற்கொண்டது. அவர்கள் கார்த்திகேயனை கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார்த்திகேயனின் தாய் தி.மு.க மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச்செயலாளர் சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டு சதி செய்து கூலிப்படையினரை ஏவி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.


விசாரணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சீனியம்மாள் மற்றும் அவரது கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story