Top
undefined
Begin typing your search above and press return to search.

“மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக மக்கள் பார்க்கிறார்கள்” முதல்வரின் பேச்சை ஏற்று போராட்டம் வாபஸ்! தமிழக மருத்துவர்கள் அறிக்கை.!

“மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக மக்கள் பார்க்கிறார்கள்” முதல்வரின் பேச்சை ஏற்று போராட்டம் வாபஸ்! தமிழக மருத்துவர்கள் அறிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2019 12:52 PM GMT



தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் 18,070 டாக்டர்கள் கடந்த எட்டு நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வந்தனர். இப்போராட்டத்தின் போது உயர்சிகிச்சை கிடைக்காமல் பல நோயாளிகள் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து, இன்று காலைக்குள் பணிக்கு திரும்பாதவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும். புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.


முதல்வர் வேண்டுகோள்


இன்றய நிலையில் நாடெங்கும் டெங்கு உட்பட தொற்றுக் காய்ச்சல்கள் பரவி வரும் சூழ்நிலையில் டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். அரசு மருத்துவர்களின் குறைகளை அகற்றும், மருத்துவர்களை மக்கள் கடவுள்களாக பாவித்து வருகின்றனர். இத்தகைய புனிதமான பணியில் உள்ள மருத்துவர்கள் தற்போதைய அவசர சூழ்நிலையில் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் தங்கள் பணியை தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


வாபஸ்


இந்த நிலையில் அரசு மருத்துவர்கள் தாங்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், “வேலைநிறுத்தத்தை தற்காலிக வாபஸ் பெற்றுள்ளோம். வேலைநிறுத்தம் 8 நாளாக நீடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை கடவுளுக்கு இணையாக மக்கள் பார்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருத்துவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story