Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆளுநர் கிரண் பேடியை ‘இராஷசி; என நாகரீகமின்றி வருணித்த புதுவை முதல்வர்! வலுக்கும் கண்டனங்கள்.!

ஆளுநர் கிரண் பேடியை ‘இராஷசி; என நாகரீகமின்றி வருணித்த புதுவை முதல்வர்! வலுக்கும் கண்டனங்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2019 10:22 AM GMT


புதுவையில் ஆளுநர் கிரண் பேடி மக்களுக்கான திட்டங்கள் சரிவர நடத்தப்படுகிறதா என அவ்வப்போது நேரடியாக களத்துக்கே சென்று கண்காணித்து வருகிறார். மத்திய அரசின் சிறப்புத்திட்டங்களை மக்களிடையே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மத்திய அரசின் நேரடி நிதி உதவி திட்டங்கள் ஊழல் இல்லாமல் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து வருகிறார்.


இதனால் ஆத்திரம் அடையும் புதுவை முதல்வர் நாராயணசாமி கவர்னரை கண்டபடி விமர்சித்து பேசி வருகிறார்.


தற்போது எல்லை மீறி கவர்னர் கிரண்பேடியை ‘மத்திய அரசால் புதுவைக்கு அனுப்பப்பட்ட இராக்ஷசி’ என வருணித்துள்ளார்.


நேற்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாராயணசாமி பேசுகையில் “மக்களுடைய துயரங்களைப் போக்க கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு இங்கு அனுப்பியுள்ள ராட்சசி நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்,” என்று பேசினார்.


ஒரு கவர்னரை அதுவும் பெண் கவர்னரை அவர் எல்லை மீறி வருணித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நாராயணசாமியின் இந்த பேச்சு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


Next Story