Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் கார்பரேட் வரி குறைப்பின் எதிரொலி - இதுவரை இல்லாத உச்சம் தொட்ட மும்பை பங்குசந்தை : இந்தியாவில் முதலீட்டுக்கு சாதகமான சூழல்!

மத்திய அரசின் கார்பரேட் வரி குறைப்பின் எதிரொலி - இதுவரை இல்லாத உச்சம் தொட்ட மும்பை பங்குசந்தை : இந்தியாவில் முதலீட்டுக்கு சாதகமான சூழல்!

MuruganandhamBy : Muruganandham

  |  4 Nov 2019 11:33 AM GMT


முதலீட்டுக்கு சாதகமான சூழல், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக மும்பை பங்குசந்தை இதுவரை இல்லாத உச்ச அளவை தொட்டுள்ளது. அதே போல தேசிய பங்கு சந்தையும் சாதனை அளவை தொட்டு வர்த்தகமாகி வருகிறது.


கார்பரேட் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதை தொடர்ந்து, வர்த்தகத்திற்கு சாதகமான சூழல் நிலவுவதால், அதன் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இதே நேரத்தில் உலக சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன. அமேரிக்கா-சீனா பங்கு சந்தைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.


இன்று காலை 40,293 புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை, 40,483 புள்ளிகள் வரை சென்று இதுவரை அடையாத உச்சத்துக்கு சென்றுள்ளது. தேசிய பங்கு சந்தையும் இன்று 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.


இதில் எஃகு உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளன. Hindalco நிறுவனம், டாடா ஸ்டீல் நிறுவனம், வேதாந்தா மற்றும் jsw ஸ்டீல் நிறுவனங்கள் இந்த பட்டியலில் அடங்கும்.


ICICI Bank, Tata Motors, SBI, HCL Tech, Sun Pharma மற்றும் Bharti Airtel போன்ற நிறுவனங்கள் அதிகம் இலாபம் ஈட்டிய பங்குகள் ஆகும்.


Next Story