Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜம்மு காஷ்மீர் – லடாக் பிரிக்கப்பட்ட பின் இந்தியாவின் புதிய அதிகாரபூர்வ வரைபடம்! உள்துறை வெளியிட்டது.!

ஜம்மு காஷ்மீர் – லடாக் பிரிக்கப்பட்ட பின் இந்தியாவின் புதிய அதிகாரபூர்வ வரைபடம்! உள்துறை வெளியிட்டது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Nov 2019 5:26 AM GMT


ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அதிகாரபூர்வமான இந்திய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேற்படி மாற்றத்திற்கு பிறகு இந்தியாவில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.


கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீரின் லெப்டினண்ட் கவர்னராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி கிரிஸ் சந்திர மர்முவும், திரிபுரா கேடர் ஓய்வுபெற்ற அதிகாரி ராதாகிருஷ்ண மாத்தூர், யூனியன் பிரதேசமான லடாக்கின் லெப்டினண்ட் கவர்னராகவும் பொறுப்பேற்ற பின் புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.





இதை அடுத்து இந்தியாவின் மொத்த மாநிலங்கள் 28, யூனியன் பிரதேசங்கள் 9 ஆகும். ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு சிறிது மாற்றம் செய்யப்பட்ட நமது தேசத்தின் மாநில அளவிலான வரைபடத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


Next Story