Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் முயற்சியினால் 1.45 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு சாதனை.!

மத்திய அரசின் முயற்சியினால் 1.45 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு சாதனை.!

MuruganandhamBy : Muruganandham

  |  5 Nov 2019 5:59 PM GMT


2019 ஆம் ஆண்டுக்கான தரிசு நிலங்களுக்கான வரைபடத்தில், முழு நாட்டிற்கும் தரிசு நிலங்களின் பரப்பளவு 55.76 மில்லியன் ஹெக்டேர் அல்லது நாட்டின் புவியியல் பரப்பளவில் 16.96 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது.


இதுவே 2008-09 ஆம் ஆண்டில் 56.60 மில்லியன் ஹெக்டேர்களுடன், நாட்டின் புவியியல் பரப்பளவில்17.21 சதவீதமாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது தற்போது 1.45 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்கள் தரிசு நிலங்கள் அல்லாத வகைகளாக மாற்றப்பட்டுள்ளது.


2008-09 முதல் 2015-16 வரை நாட்டில் பல்வேறு தரிசு நில வகைகளில் 0.84 மில்லியன் ஹெக்டேர் (0.26 சதவீதம்) மாற்றம் கண்டுள்ளது. நீரில் மூழ்கிய சதுப்பு நிலம், மணல் நிறைந்த பகுதிகள், மேய்ச்சல் நிலங்கள் தரிசு அல்லாத நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.


மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய்க்கிழமை தரிசு நிலங்கள் தொடர்பான வரைபடத்தை வெளியிட்டார். உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைக் கொண்ட இந்தியா உலக மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டுள்ளது.


ராஜஸ்தான், பீகார் , உத்தரபிரதேசம், ஆந்திரா, மிசோரம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.


Next Story