Top
undefined
Begin typing your search above and press return to search.

'ஸ்கில் இந்தியா' , ‘ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டங்கள் படிக்காதவர்களைக் கூட தொழில் மேதைகளாக்கும் திட்டங்கள்!! மோடி அரசுக்கு யூனிசெப் நிறுவனம் பாராட்டு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Nov 2019 4:00 AM GMT



பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக செயல்படுத்தி வரும், ஸ்கில் இந்தியா, ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’திட்டங்களுக்கு ஐநா சபையின் யூனிசெப் நிர்வாகத்தினர் மனமார பாராட்டு தெரிவித்துள்ளனர். இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும், அதற்கான தங்கள் திட்டங்களுடன் அவர்களை இணைக்க உதவுவதாக பாராட்டியுள்ளது.


யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஹோல்ஸ்மேன் ஃபோர் ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் ஒரு நேர்காணலில் கூறுகையில் ‘திறன் இந்தியா’ மற்றும் ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’ திட்டங்கள் “அருமையாக செயல்படுகின்றன” என்று கூறினார்.


இளைஞர்களுக்கான இந்த திட்டங்களுடன் இணைந்து யுனிசெஃப் அதன் பங்களிப்பை உறுதி செய்யும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடைய ஒரு இணைப்பாகவும் இவை உள்ளன என்று அவர் கூறினார்.


இளைஞர்களுக்கு திறன் தொகுப்புகளை வழங்குவதையும், சிறந்த வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட யுனிசெப்பின் இரண்டு புதிய திட்டங்களைத் இந்தியாவில் தொடங்க உள்ளதாகவும் இந்த திட்டங்களை மோடி அரசின் மேற்கண்ட 2 திட்டங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் சிறந்த வேலைகளைப் பெற உதவும்.


"இளைஞர்கள் தங்கள் கல்வியைப் பற்றி கவலைப்படுகிறார்கள், அந்த கவலைகள் வேண்டாம் என்றும் இது காலாவதியான ஓன்று என்றும், வாழ்வாதரங்களை ஏற்படுத்திக் கொள்வதில் கல்வி ஒன்றும்தடையில்லை , திறனை வளர்ப்பது அவசியம் அதற்கு ஆதரவாக மோடி அரசின் திட்டங்கள் உள்ளதாகவும், இதன் மூலம் திறனும், ஆர்வமும் இருப்பின் பெரிய அளவில் படிக்காதவர்கள் கூட தொழிலில் மேம்பாடு அடையலாம், நாங்கள் இணைவதன் மூலம் 300 மில்லியனுக்கும் அதிகமான இளம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.


யுனிசெப் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த முயற்சியை தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமை தொடங்கினார். அப்போது ஹென்றிட்டா ஹோல்ஸ்மேன் ஃபோர் இவ்வாறு கூறினார். அப்போது ஆண்களுக்கு இணையாக பெண்களின் ஊதியம் இந்தியாவில் குறைவாக உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.


Next Story