Top
undefined
Begin typing your search above and press return to search.

திருக்குறள் தெரியாத வேட்டி கட்டிய தமிழன் ப.சிதம்பரத்தின் ட்விட் - யார் அந்த அட்மின்.!

திருக்குறள் தெரியாத வேட்டி கட்டிய தமிழன் ப.சிதம்பரத்தின் ட்விட் - யார் அந்த அட்மின்.!

saravanaBy : saravana

  |  6 Nov 2019 6:35 AM GMT


கடந்த சில நாட்களாக சமூக வலைதங்களில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் வலம் வருகிறார். ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து காவி வள்ளுவரை பிரபலபடுத்தினார். பா.ஜ.க வின் பி டீம் என்பது அதிமுக அல்ல தி.மு.க வின் ஸ்டாலின் தான் என்று பேசி வருகின்றனர். இலவசமாக பா.ஜ.கவை ப்ரோமோஷன் செய்து வருகிறார் ஸ்டாலின்.


இந்த நிலையில் திகார் சிறையில் உள்ள வேட்டி கட்டிய தமிழன் ப.சிதம்பரத்தின் அதிகார பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு திருக்குறள் பதியப்பட்டு அதற்கு விளக்கமும் அளித்துள்ளனர். பாவம் பா.சிதம்பரத்தின் அட்மின் யார் என்று தெரியவில்லை அவருக்கு திருக்குறள் தெரியுமா என்பதும் தெரியவில்லை பதிந்துள்ள குறள் தவறானது.




https://twitter.com/PChidambaram_IN/status/1191623931003670528


அவர் பதிவிட்டுள்ள தவறான குறள்


"நாணாமை நாடாமை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்"


சரியான குறள்


நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்


ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள குறளில் நாரின்மை என்ற வார்த்தையை காணவில்லை. தவறான குறள் பதிந்து அதற்கு விளக்கும் அளித்துள்ள அட்மின் யார் என்று வலைதள வாசிகள் தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வேட்டி கட்டிய தமிழன் திருக்குறள் அட்மினை வைத்துள்ளாரா என நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.


Next Story