Top
undefined
Begin typing your search above and press return to search.

பிள்ளையார்பட்டி தொடர்ந்து பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை அவமரியாதை செய்யப்பட்டது! இதை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.!

பிள்ளையார்பட்டி தொடர்ந்து பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை  அவமரியாதை செய்யப்பட்டது! இதை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Nov 2019 12:18 PM GMT


தஞ்சையில் பிள்ளையார்பட்டி  பகுதியில் திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலை மீது சில மர்ம நபர்கள் 5 நாட்கள் முன்பு சாணி வீசி சென்றுள்ளனர்.இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்,இந்தப் பதற்றம் இன்னும் முடியாத நிலையில்.



தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் திருவள்ளுவர் சிலை உள்ளது. இன்று காலை இந்த சிலையில் யாரோ சிலர் மர்ம பொருளை வீசியுள்ளனர். இதனால் சிலையின் ஒரு பகுதி சேதமானது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர்,ராஜபாண்டி தலைமையில் திரண்டு சிலையை கழுவி சுத்தம் செய்தார்கள்.






பின்பு சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதைப் பற்றி தகவல் அறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story