Top
undefined
Begin typing your search above and press return to search.

நாளை அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்! காத்திருக்கிறது மிகப்பெரிய கவுரவ விருது.!

நாளை அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்! காத்திருக்கிறது மிகப்பெரிய கவுரவ விருது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Nov 2019 12:39 PM GMT



அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன் நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்லவிருக்கிறார்.


தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அரசு முறை பயணமாக வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்குச் செல்கிறாா். வரும் 9-ஆம் தேதியன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் சாா்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறாா். வரும் 10-ஆம் தேதியன்று ‘சா்வதேச சமுதாய ஆஸ்கா் 2019’ விழாவில், துணை முதல்வருக்கு விருது அளிக்கப்பட உள்ளது.


இதன்பின், வரும் 12-ஆம் தேதியன்று சிகாகோ நகர மேயா் மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநா் உள்பட முக்கியப் பிரமுகா்களை சந்தித்துப் பேசவுள்ளாா். வரும் 13-ஆம் தேதியன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. செல்கிறாா். அதன்பின்பு, வரும் 14-இல் ஹூஸ்டன் நகருக்குச் சென்று தமிழ் அமைப்புகள் சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு, அங்குள்ள முக்கிய தொழில் முனைவோா்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறாா்.


வரும் 15-ஆம் தேதியன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான மின்னணு டோனா் பலகையை தொடங்கி வைக்கிறாா். வரும் 16-இல் நியூயாா்க் சென்று தமிழ் சங்கங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.


இந்த சுற்றுப்பயணத்தின் போது நிதித் துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணனும் உடன் செல்கிறாா். வரும் 17-ஆம் தேதியன்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தமிழகம் திரும்புகிறாா் என்று துணை முதல்வரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story