Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் யோகா மையம்! அடிக்கல் நாட்டினார் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் யோகா மையம்! அடிக்கல் நாட்டினார் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Nov 2019 10:31 AM GMT


தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்’ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்படும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் 25-ந்தேதி சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.


அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.96 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மைய கட்டிடத்திற்கு  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.



அரசு டாக்டர்கள்  பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு அனைத்து முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், போலீஸ் உதவியை காலதாமதம் இன்றி பெற்றிட உடனடி உதவி தொலைபேசி வசதி அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.


அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, 80 அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடி உதவி தொலைபேசி வசதிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டு, திருவள்ளூர், தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடி உதவி தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 365 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.


Translated Article From DT NEXT


Next Story