Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தி வழக்கை தொடர்ந்தது யார் ? சர்ச்சைக்குரிய நிலத்திற்கு போராடுவது யார் ?

அயோத்தி வழக்கை தொடர்ந்தது யார் ? சர்ச்சைக்குரிய நிலத்திற்கு போராடுவது யார் ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2019 5:10 AM GMT


70 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழக்கிற்கு இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உத்திர பிரதேச மாநில அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு பல வருடங்களாக நடைபெறுகிறது. இந்த நிலத்தை 3 அமைப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். மூன்று பெரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதி மன்றம் 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து 3 அமைப்பினரும் உச்ச நீதி மன்றம் சென்றனர்.


அயோத்தி நிலத்திற்காக 3 அமைப்பினர் உரிமை கொண்டாடுகின்றனர். அயோத்தி என்பது ராமர் பிறந்த இடம் என ராம் லல்லா என்ற அமைப்பு உரிமை கோருகிறது. அஙகு ராமர் வாழ்ந்தார் என்றும் தவறுதலாக பாபர் மசூதி கட்டுப்பட்டுவிட்டது என்றும் வாதம் செய்கிறது.


பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தை சொந்தம் கொண்டாடும் சாதுக்களின் அமைப்பிற்கு பெயர் நிர்மோஹி அகாரா. 1959-ஆம் ஆண்டு இந்த இடத்துக்கு இந்த அமைப்பினர் உரிமை கொண்டாடினர்.
வழக்கு தொடுத்தவர்களில் மிக முக்கியமானவரான முகமது ஹாசிம் அன்சாரியின் மகன் ஆவார். தந்தை 2016-இல் உயிரிழந்த பிறகு இந்த வழக்கை மகன் இக்பால் அன்சாரி தொடர்ந்து நடத்தி வருகிறார். டைலராக இருந்த ஹாசிம் அன்சாரி பாபர் மசூதி அருகே வசித்து வந்தார். வழக்கில் முதல் மனுதாரர் இவர்தான்.


நன்றி : Oneindia


Next Story