Top
undefined
Begin typing your search above and press return to search.

இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் சாஹிப் சிறப்பு புதிய சாலையை யாத்திரைக்காக திறந்து வைத்தார் - பிரதமர் நரேந்திர மோடி!

இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் சாஹிப் சிறப்பு புதிய சாலையை யாத்திரைக்காக திறந்து வைத்தார் - பிரதமர் நரேந்திர மோடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2019 12:16 PM GMT



சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடம், அண்டை நாடான பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ளது. இதற்காக சீக்கிய பக்தர்கள், சென்று வருவதற்கு வசதியாக இரு நாடுகளுக்கு இடையே, 4 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலையை யாத்ரீகர்களுக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.


அவர் பேசியதாவது: குருநானக் தேவ் 550வது பிறந்தநாளுக்கு முன்னதாக கர்தார்பூர் சாஹிப் சிறப்பு சாலை திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தந்துள்ளது,கர்தார்பூர் யாத்திரைக்கு செல்லும் சிறப்பு சாலை திறக்கும் விழாவில், இந்தியாவின் உணர்வுகளை மதித்ததாக பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி கூறுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் ,பிரதமர் நரேந்திர மோடி,பஞ்சாப் முதலமைச்சர் குர்தாஸ்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி., சன்னி தியோல், மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி,உட்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story