Top
undefined
Begin typing your search above and press return to search.

தீர்ப்பு எப்படி வந்தாலும் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை! அமைதியை வலுப்படுத்துங்கள் : பிரதமர் மோடி இறுதி வேண்டுகோள் !

தீர்ப்பு எப்படி வந்தாலும் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை! அமைதியை வலுப்படுத்துங்கள் : பிரதமர் மோடி இறுதி வேண்டுகோள் !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2019 3:26 AM GMT



சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இன்று வெளியாகிறது. சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதிலும் உள்ள மக்கள், ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இக்காலகட்டத்தில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அமைதி காட்டியது பாராட்டப்பட வேண்டியது. நீதிமன்ற தீர்ப்புக்குப்பின்னும், நாம் அனைவரும் ஒன்றாக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.


அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது. இம்முடிவு, இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் நிறைந்த நமது பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story