Top
undefined
Begin typing your search above and press return to search.

கால்நடை மருத்துவமனைகளில் ஹைட்ராலிக் ஏணி வசதி ஏற்படுத்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவை இளைஞர் கடிதம்!

கால்நடை மருத்துவமனைகளில் ஹைட்ராலிக் ஏணி வசதி ஏற்படுத்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவை இளைஞர் கடிதம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Nov 2019 10:52 AM GMT


கால்நடை மருத்துவமனைகளில் ஹைட்ராலிக் ஏணி வசதியை ஏற்படுத்தக்கோரி கோவையை சேர்ந்த இளைஞர் மாதம்பட்டி வே.பிரசாந்த், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-


கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் சுமார் 30 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கால்நடை பண்ணை வைத்து பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. அந்த கால்நடை மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகள் இல்லாததால், கால்நடைகளும், கால்நடைகளை பராமரிப்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


எனவே ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஏணியை பயன்படுத்தினால் கால்நடைகள் தவறிக் கீழே விழும்போது, அதனை நிற்க வைக்க ஏதுவாக அமையும்.


நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் பாரை்க்க, நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவையை போன்று கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கினால் கால்நடைகளும் பயன்பெறும்.


நமது நாட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மாநகராட்சிகளில் மட்டும் இலவச வைஃபை வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒவ்வொரு கிராமத்திற்கும் விரிவாக்கம் செய்தால், கிராமப்புற மாணவர்களும் பயன்பெறுவார்கள். எனவே கிராமப்புறங்களிலும் இலவச வைஃபை சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அந்த கடிதத்தில் மாதம்பட்டி வே.பிரசாந்த் குறிப்பிட்டுள்ளார்.


Next Story