Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்ரீ ராமர் ஆலயம் கட்ட முஸ்லிம்கள் சார்பில் தங்கத்தால் ஆன செங்கல் நன்கொடை !! பிரதமர் மோடியிடம் அளிக்கிறார் மொகலாய இளவரசர்

ஸ்ரீ ராமர் ஆலயம் கட்ட முஸ்லிம்கள் சார்பில் தங்கத்தால் ஆன செங்கல் நன்கொடை !! பிரதமர் மோடியிடம் அளிக்கிறார் மொகலாய இளவரசர்

ஸ்ரீ ராமர் ஆலயம் கட்ட முஸ்லிம்கள் சார்பில் தங்கத்தால் ஆன செங்கல் நன்கொடை !! பிரதமர் மோடியிடம் அளிக்கிறார் மொகலாய இளவரசர்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Nov 2019 5:02 AM GMT


மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை நாடு முழுவதும் மக்கள் அமைதியான முறையில், ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.


இது தொடர்பாக பாபர் வழி முகாலய அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபு தின் டுக்கி கூறுகையில்; உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. நாங்கள் எதிர்பார்த்தது. அனைவரும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அயோத்தியில் ராமர்கோயில் கட்ட ஹிந்துக்களுக்கு முஸ்லிம்கள் தங்களால் இயன்ற அளவில் உதவி செய்வர். இதன் மூலம் சகோதரத்துவத்துக்கு உதாரணமாக திகழவேண்டும். என்னை பொறுத்த வரையில் நான் அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு தங்கத்தால் ஆன ஒரு செங்கலை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


இளவரசர் யாகூப் ஹபிபு தின் டுக்கி நீதிமன்ற விசாரணையின் போது சர்ச்சைக்குரிய இடம் வக்பு வாரியத்துக்கு உரிமையான இடம் இல்லை என்றும், மொகலாய மன்னர் வழி வம்சமான தங்களுக்கே உரியது என்றும் இந்த இடத்தை ராமர் கோவில் கட்டுவதற்கு விட்டுத்தர தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News