Top
undefined
Begin typing your search above and press return to search.

கி.வீரமணி முகத்தில் சாணியடித்த நடிகர் சிம்பு!

கி.வீரமணி முகத்தில் சாணியடித்த நடிகர் சிம்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Nov 2019 7:36 AM GMT


கலைத்துறையில் முன்னேறிய நட்சத்திரங்களை தங்கள் பக்கம் இழுப்பதில் திக வீரமணிக்கு நிகர் அவர்தான். இந்த கும்பல், பல்வேறு தமிழ் திரைப்பட நடிகர்- நடிகைகளை தங்களின் ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு வருகிறது.


இப்படி திகவிற்கு ஆதரவாக சிக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு உடனே ஈவேரா விருதுகள். ஈவேரா பற்றிய புத்தகங்கள் மற்றும் ஈவேராவின் பொம்மைகளை வழங்குவது கி.வீரமணியின் வாடிக்கை.


அதாவது, மதமாற்றும் கிறிஸ்தவ கும்பல், முஸ்லிம் கும்பல்கள் என்னென்ன பித்தலாட்டங்களை செய்யுமோ அதற்கு கொஞ்சமும் சளைக்காத கும்பல்தான் இந்த ஈவேரா மோசடி கும்பல்.


அந்த வகையில் நடிகர் சிம்புவுக்கு வலை விரித்தார் கி.வீரமணி. ஈவேராவின் கொள்கைவிளக்க ஆல்பத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவை அணுகியது கி.வீரமணி கும்பல். அவரும் வீரமணியின் பித்தலாட்ட சூழ்சி தெரியாமல் நடிகனாக ஒத்துக்கொண்டார்.


ஒரு நடிகராக சிம்புவின் பணி அதோடு முடிந்து போய்விட்டது. ஆனால் கி.வீரமணியின் சதி அதன் பிறகும் தொடர்ந்தது. சிம்புவை அழைத்து அவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருதை வழங்கினார் வீரமணி. அதனை வேண்டாவெறுப்புடன் பெற்றுக்கொண்டார் நடிகர் சிம்பு. (அந்த நிகழ்ச்சி வீடியோவில் சிம்புவின் முகம் இதனை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது). அந்த விருதையும், ஈவேரா பொம்மையையும், ஈவேராவின் வெங்காய புத்தகங்களையும் சிம்புவுக்கு வழங்கும்போது வீரமணியின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. வலிய வலிய வந்து சிம்புவிடம் வீரமணி பல்லிழித்தார்.





இந்த விருது வழங்கப்பட்டது தொடர்பான செய்தி ஊடகங்களிலும் வெளியானது. வீரமணி உள்ளம் மகிழ்ந்தார். ஈவேரா குஞ்சுகளும் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ஈவேராவுக்கு மேலும் ஒரு அடிமை சிக்கிவிட்டார் என்றே அவர்கள் ஆனந்த கூத்தாடினர்.


ஆனால் இப்போது அவர்களின் சுய ஆனந்தத்தில் டன்கணக்கில் மண் விழுந்துவிட்டது.


நடிகர் சிம்பு ஆரம்பத்திலிருந்தே சிவபக்தர். அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சபரிமலைக்கு செல்வதற்காக சமீபத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார்.


மிகப்பெரிய சிவபக்தனான சிம்புவை நாத்திகனாக மாற்றிவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த கி.வீரமணிக்கு, நடிகர் சிம்புவின் ஐயப்ப தரிசனம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


நடிகர் சிம்பு ஆரம்பத்திலிருந்தே சிவபக்தர். அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சபரிமலைக்கு செல்வதற்காக சமீபத்தில் மாலை அணிந்தார். இப்போது அவர் ஐயப்பன் விரதம் மேற்கொண்டு வருகிறார்.


மிகப்பெரிய சிவபக்தனான சிம்புவை நாத்திகனாக மாற்றிவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த கி.வீரமணிக்கு, நடிகர் சிம்புவின் ஐயப்பன் விரதம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபற்றி கேள்விப்பட்டதும் வீரமணிக்கு சொல்லொணா கோபம். ஆமாம் இதைவிட கி.வீரமணி முகத்தில் வேறுயாராவது சாணியடிக்க முடியுமா? வீரமணியைவிட அவரது கைத்தடிகள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் சிம்புவுக்கு வழங்கிய பெரியார் விருதை உடனே திரும்பப் பெறவேண்டும் வீரமணியிடம் முறையிட்டனர்.


இருந்தாலும் சிம்புவுக்கு கொடுக்கப்பட்ட பெரியார் விருதை திரும்பப் பெற்றுக்கொண்டால், அது தனது முகத்தில் தானே சாணி அடித்த கதையாக மாறிவிடும் என்பதை உணர்ந்த வீரமணி, அவரது கைத்தடியான திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மூலம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.


அதாவது சிம்புவுக்கு பெரியார் விருது வழங்கப்படவில்லையாம். சும்மா பாராட்டினார்களாம். இப்படி தனது வழக்கமான மற்றொரு பித்தலாட்டத்தை அரங்கேற்றம் செய்துள்ளார் வீரமணி.


ஈவேராவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கியதாக வெட்கமே இல்லாமல், நாகூசாமல் பொய் சொல்லி, அந்த கட்டுக்கதையை புத்தகமாக எழுதி காசு சம்பாதித்த வீரமணிக்கு, இதுவெல்லாம் ஒரு ஜூஜூபி என்கின்றனர் ஊடக நண்பர்கள்.


Next Story