Kathir News
Begin typing your search above and press return to search.

30 ஆண்டுகளுக்கு முன் நாட்டு மக்கள் கொடுத்த செங்கற்கள் புதிய ராமர் கோவிலின் அஸ்திவாரமாகிறது !

30 ஆண்டுகளுக்கு முன் நாட்டு மக்கள் கொடுத்த செங்கற்கள் புதிய ராமர் கோவிலின் அஸ்திவாரமாகிறது !

30 ஆண்டுகளுக்கு முன் நாட்டு மக்கள் கொடுத்த செங்கற்கள் புதிய ராமர் கோவிலின் அஸ்திவாரமாகிறது !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2019 4:30 AM GMT


சென்ற 1989 ஆண்டு அயோத்தில் ராமர் கோவில் கட்டும் முயற்சியை விஸ்வஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் முன்னெடுத்தன. அப்போது கோவில் கட்டுவதற்கான கரசேவை நடத்தவும் நாடு முழுவதுமிருந்து கரசேவை தொண்டர்கள் அழைக்கப்பட்டனர். நாடு முழுவதுமிருந்து ஸ்ரீ ராமர் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சக்கணக்கான செங்கற்கள் மக்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டது.


குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 'ஸ்ரீ ராம்' என்ற வாசகத்துடன் பொறிக்கப்பட்டுள்ள இந்த கற்களை சாமானிய மக்கள் அனுப்பிவைத்தனர். இதன்படி இலட்சக்கணக்கான செங்கற்கள் அயோத்தியில் குவிந்தன. இந்த செங்கற்களில் சுமார் 50 ஆயிரம் செங்கற்கள் அப்போது ராமர் கோவிலுக்கான அஸ்திவாரம் எழுப்பும் பணிகளில் பயன்படுத்தப்பட்டது.


மீதம் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கற்கள் ராமர் கோவில் எழுப்புவதற்காக விஎச்பி யால் அமைக்கப்பட்ட பட்டறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கற்கள் தற்போது புதிதாக அமைக்கப்படும் கோவிலுக்கான அஸ்திவாரத்துக்கு பயன்படுத்தப்படும் என்று வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்தார்.


மீதியுள்ள கற்கள் ராமர் கோவில் எழுப்புவதற்காக தங்களை தியாகம் செய்து கொண்டவர்களின் நினைவாக எழுப்பப்பட உள்ள நினைவுச் சுவரில் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


கட்டப்பட உள்ள உத்தேச கோயிலின் மாதிரியை வடிவமைத்துள்ள சந்திரகாந்த் சோம்புரா கூறுகையில் , இந்த செங்கற்களின் மூலம் வலுவான 'ராம் ஷிலாஸ்' உருவாக்கப்படும் என்றும், இதன் மீது கோவில் எழுப்பப்படும் என்றும் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News