Top
undefined
Begin typing your search above and press return to search.

சிக்கும் கார்த்தி சிதம்பரம் 7.5 கோடி மோசடி! அவரது மனைவியும் சிக்குகிறாரா?

சிக்கும் கார்த்தி சிதம்பரம் 7.5 கோடி மோசடி! அவரது மனைவியும் சிக்குகிறாரா?

saravanaBy : saravana

  |  13 Nov 2019 9:01 AM GMT


முன்னாள் மத்திய நிதி அமைச்சர் தற்போது திகாரில் இருக்கும் ப.சிதம்பரத்தின் மகன் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை விற்றது தொடர்பாக 7.5 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.


சிதம்பரத்தின் குடும்பம் சென்னையை ஒட்டியுள்ள முட்டுக்காடு பகுதியில் நிலம் வைத்துள்ளனர், அந்த நிலத்தை, அக்னி எஸ்டேட் பவுண்டேஷன் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு,தலா ஒரு 4.15 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். விற்றவர்கள் பெயரில்,சிவகங்கை எம்.பி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பெயர்கள் உள்ளது. விற்கப்பட்ட நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பானது, 3 கோடி ரூபாய் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மீதி தொகையான 1.25 கோடி ரூபாயை,கருப்பு பணமாக கைமாறியுள்ளது. நிலத்தின் மொத்தமதிப்பில் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி க்கு 1.35 கோடி ரூபாயும், கார்த்திசிதம்பரத்திற்கு , 6.38 கோடி ரூபாயும், கருப்பு பணம் கைமாறியுள்ளது .


சென்ற 2015,டிசம்பர் மாதம் அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங் தனியார் நிறுவனத்தில், வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை சேர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்டது . அச்சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் ஹார்ட்டிஸ்க் போன்றவை கைப்பற்றபட்டன. அந்த ஹார்ட்டிஸ்க்கில் கிடைத்ததுதான் சிதம்பர குடும்பத்தின் சொத்து பற்றிய ஆவணங்களும் பணபரிவத்தனை தொடர்பான கணக்கு வழக்கு. இதனை தொடர்ந்து கார்த்தி சிதம்பர குடும்பத்தாரின் மீது வழக்கு தொடர்ந்தது அமலாக்க பிரிவு. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் பதியப்பட்டு நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது .


விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீதான குற்றங்களுக்கு தகுந்த ஆதாரங்களைவருமான வரி துறை சமர்ப்பித்தது.


இந்நிலையில் வருமான வரி துறை தொடர்ந்த இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக,கருதப்படும் 'ஹார்டு டிஸ்க்' நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் நடத்தி வரும் இரு தனியார் நிறுவனங்களுக்கும் நிறுவனங்களில் நடந்த பணப்பரிமாற்றம்தொடர்பன ஆதாரங்களை அக்னி பவுண்டேஷன் வருமானவரி நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இவளுக்கு தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயப்பிரகாஷிடம் நடத்திய விசாரணையிலும் அவரே ஒப்பு கொண்டுள்ளார்.


விற்பனை தொடர்பான ஆதாரம் மட்டுமல்லாமல், வாய்மொழி ஆதாரமும் உள்ளது. எனவும் வருமான வரித் துறையால் தொடுக்கப்பட்டுள்ள, இரண்டு வழக்கிலும், மனுதாரர் சாட்சியமான ரோகன்ராஜை, மீண்டும் விசாரணைக்கு அழைக்க அனுமதி வழங்குகிறது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிவகங்கை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவது உறுதி.


Next Story