Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த 19 ஆண்டுகளில் பயங்கரவாதத்தால் காஷ்மீரில் உயிர் இழந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர் தெரியுமா ? மலைக்க வைக்கும் புள்ளிவிபரங்கள்

கடந்த 19 ஆண்டுகளில் பயங்கரவாதத்தால் காஷ்மீரில் உயிர் இழந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர் தெரியுமா ? மலைக்க வைக்கும் புள்ளிவிபரங்கள்

கடந்த 19 ஆண்டுகளில் பயங்கரவாதத்தால் காஷ்மீரில் உயிர் இழந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர் தெரியுமா ? மலைக்க வைக்கும் புள்ளிவிபரங்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2019 5:14 AM GMT


காஷ்மீர் பல தசாப்தங்களாக பயங்கரவாதத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாகவும் நட்பு நாடாகவும் உள்ள பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்தவும், காஷ்மீரை தனது பிடிக்குள் கொண்டு வரவும் ஒரு "புனிதப் போர்" என்ற பெயரில் பயங்கரவாதத்தை நடத்துவதற்காக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை குவித்து ராணுவம் மற்றும் அப்பாவி மக்களுடன் போர் நடத்தும் ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.


இது இந்த நிலத்திற்காக மட்டுமல்ல, உம்மாவின் தவறான அவர்களின் பழமையான உணர்விற்காகவும்தான். இருப்பினும், காஷ்மீரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரை பயங்கரவாதிகள் பறித்திருந்தாலும், நடந்த பயங்கரவாதத்திற்கு இங்குள்ள பல ஊடகங்கள் பெரும்பாலும் அனுதாபம் காட்டியே வந்துள்ளன.


தெற்காசிய பயங்கரவாதம் குறித்த போர்ட்டலின் கூற்றுப்படி, 2000 ஆம் ஆண்டு முதல், 11,442 கொலை சம்பவங்கள் காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,808 பொதுமக்கள் இறந்துள்ளனர். இந்த சம்பவங்களின் போது 3426 பாதுகாப்புப் படையினர் இதுவரை உயிர் இழந்துள்ளனர்.


காஷ்மீரில் இந்த கொடிய சம்பவங்களை செய்த பயங்கரவாத இயக்கம் ஒன்றோ அல்லது இரண்டோ அல்ல, கிட்டத்தட்ட 12 பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் உதவியால் அங்கு தளம் அமைத்து அந்த மாநிலத்தை இரத்த களரியாக்கியுள்ளன.


ஹிஸ்புல் உல் முஜாஹிதீன் (எச்.எம்), லஷ்கர்-இ-தோய்பா (எல்.இ.டி), ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்), அல் உமர் முஜாஹிதீன் (ஏ.எம்), துக்தரன்-இ-மில்லத் (டி.எம்), ஹர்கத்-உல் முஜாஹிதீன் (ஹு.எம்) முன்னர் ஹர்கத்-உல்-அன்சார், ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி (ஹுஜி), ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி (ஜே.கே.ஐ.எஃப்), ஜமைக்க்-உல்-முஜாஹிதீன் (ஜூம்), ஜமாஅத்-இ-இஸ்லாமி (ஜீஐ), ஜம்மு மற்றும் காஷ்மீர் விடுதலை முன்னணி - யாசின் மாலிக் பிரிவு (ஜே.கே.எல்.எஃப்-ஒய்). ஆகிய இத்தனை இயக்கங்களும் சேர்ந்துதான் காஷ்மீரை வளர்ச்சியடைய செய்யாமல் அந்த மாநிலத்தை பயங்கரவாத குழிக்குள் தள்ளி இந்தியாவின் அமைதியை நிலை குலைய செய்து வந்தன.


காஷ்மீரில் செயல்படும் பெரும்பாலான பயங்கரவாத குழுக்கள் இந்திய ஆட்சியை கவிழ்க்கவும், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டவை. உண்மையில் காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுவதாகக் கூறும் நபர்கள் மற்றும் இயக்கங்கள் கூட பெரும்பாலும் பாகிஸ்தானால் நிதியுதவி மற்றும் பல்வேறு உதவிகளை பெற்றவர்கள். இந்தியாவுடன் நேரடியாக மோத முடியாத பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக இந்த நீண்டகால பயங்கரவாத யுத்தத்தை நடத்தி வருகிறது, முக்கியமாக காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்வதையும், உள்நாட்டு மோதல்களை உருவாக்கவும் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டுள்ளது.


காஷ்மீர் வரலாற்றை 200 வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறமுடியாது என்றாலும், காஷ்மீர் பிரச்சினையின் அடிப்படை பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் அதைப்பற்றி பயங்கரவாதிகளோ அல்லது இங்குள்ள பிரிவினைவாத இயக்கங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை, அதேபோல பயங்கரவாதிகளை போராளிகள் என சித்தரிக்கும் சில இந்திய ஊடகங்கள் கூட அங்குள்ள அடிப்படை பிரச்சனைகளை கண்டுகொண்டதில்லை. உண்மை என்னவென்றால், காஷ்மீர் எரிக்கப்படுவதற்கான காரணம் ஜிகாத் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதம் தான். இருப்பினும் ஊடகங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பயங்கரவாதிகளிடம் மிகவும் கருணை காட்டியே வருகின்றன.


காயமடைந்த கல் வீச்சாளரை பார்கா தத் என்ற ஊடகம் ஒரு முறை பேட்டி கண்டதை ஒருவர் நினைவு கூர்ந்தார், அவர் ஜிஹாத்துக்காக தான் என்ன என்ன செய்கிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார், அதே நேரத்தில் காஷ்மீருக்காகத்தான் செய்கிறேன் என கூற வைக்க பார்கா அவரைத் தூண்டிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது என்றார். காஷ்மீரில் பயங்கரவாதம் வளர்ச்சியடைய ஊடகங்கள் எவ்வளவு வேலை பார்த்தன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறிய உதாரணமாகும்.


இன்று, காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் திருத்தப்பட்டு நடுநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.


ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைந்திருந்த தல்ஹா என்ற பாகிஸ்தான் குறியீட்டு பெயரை உடைய பயங்கரவாதிகளில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற பயங்கரவாதியின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாகஅவர் கூறினார்.. "போலீஸ் பதிவுகளின்படி, அவர் பாண்டிபோரா பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்தார், மேலும் பயங்கரவாத குற்றங்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அட்டூழியங்களில் ஈடுபட்டதற்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டார்-". கொல்லப்பட்ட மற்ற பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து இப்பகுதியை முழுவதுமாக ஒழுங்கு படுத்தும் இராணுவம் மற்றும் போலீசார் நடவடிக்கைகளில் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். வெடிக்கும் பொருட்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றும் வரை மக்கள் போலீசாருடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ”


இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ள போலீஸ் அறிக்கையில் , ஜிகாதிகளை பயங்கரவாதிகள் என்று வெளிப்படையாகக் கூறினாலும், அங்குள்ள செய்தி நிறுவனங்கள் வேறு பாதையில் சென்று அவர்களை ‘போராளிகள்’ என்றே அழைத்து வருகின்றன. பயங்கரவாதிகளே திருந்த முன்வந்து கொண்டிருந்தாலும் , இன்னும் பல ஊடகங்கள் மட்டும் இன்னும் தங்கள் பழைய பாதையை கைவிடவில்லை என கூறப்படுகிறது. என்றாலும் காஷ்மீரில் கீழ் மட்டத்தில் இருந்து பார்க்கும் போது மக்கள் ஒரு வித நிம்மதியடைந்திருப்பதை பார்க்க முடிகிறது, ஒரு வித மிரட்சி கலந்த மகிழ்ச்சி எல்லையோர மக்களிடம் காணப்பட்டாலும் மத்திய அரசின் அடுத்த சில அரசியல் நடவடிக்கைகளில் இவை சரியாகிவிட வாய்ப்புகள் உள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News