Top
undefined
Begin typing your search above and press return to search.

சர்ச்சுக்கு வந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு, கழற்றிவிட்ட பாதிரியார்! தஞ்சையில் பரபரப்பு!

சர்ச்சுக்கு வந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு, கழற்றிவிட்ட பாதிரியார்! தஞ்சையில் பரபரப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2019 6:35 AM GMT


தஞ்சை மாதாகோட்டை சாலையில் அமைந்துள்ள இம்மானுவேல் பெந்தகோஸ்தே சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ஸ்டேன்லி டென்னி ராபர்ட். 27 வயதான இவர், அந்த சர்ச்சுக்கு வந்த தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணிற்கு காதல் வலை வீசி உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த பெண் இவரின் காதல் வலையில் விழுந்தது.


இதனால் பாதிரியார் ஸ்டேன்லி டென்னி ராபர்ட், அந்த பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து உள்ளார். அந்த பெண்ணும் தன்னை திருமணம் செய்ய போகிறவர்தானே என்று நம்பி பாதிரியாரின் ஆசைக்கு இணைங்கி உள்ளார். பாதிரியார் தேவைப்பட்ட போதெல்லாம் அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார்.


அந்தப் பெண், பாதிரியார் ஸ்டேன்லி டென்னி ராபர்ட்டிடம் திருமணம் செய்ய வலியுறுத்திய போதெல்லாம் அதனை தாமதப்படுத்தி வந்துள்ளார் அவர்.


இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய பாதிரியார் ஸ்டேன்லி டென்னி ராபர்ட் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்.


இதுபற்றி தகவல் அறிந்ததும், உல்லாசம் அனுபவித்து ஏமாற்றப்பட்ட இளம்பெண், கொதித்து எழுந்தார். அவர் பாதிரியார் ஸ்டேன்லி டென்னி ராபர்ட்டிடன் மீண்டும் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் பாதிரியார் ஸ்டேன்லி மறுத்துவிட்டார்.


இதனைத்தொடர்ந்து வேறுவழியில்லாமல் அந்த அபலைப்பெண், தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரின் அடிப்படையில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்கள் பாதியார் ஸ்டேன்லி டென்னி ராபர்ட்டை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்று வேறு இளம் பெண்களிடம் பாதிரியார் ஸ்டேன்லி டென்னி ராபர்ட் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story