Top
undefined
Begin typing your search above and press return to search.

வாட்ஸ் அப்பில் ஸ்ரீராமர் படம் அவமதிப்பு! இஸ்லாமிய வாலிபர் கைது!

வாட்ஸ் அப்பில் ஸ்ரீராமர் படம் அவமதிப்பு! இஸ்லாமிய வாலிபர் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2019 12:42 PM GMT


இந்து மதத்தினர் நேசிக்கும் ஸ்ரீராமர் படத்தை அவமதிக்கும் வகையில் சித்தரித்து வாட்ஸ் அப்பில் பரவவிட்ட உத்தரபிரதேசததை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார்.


அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில் நாடு முழுவதும் போலீசார் சமூக ஊடகங்கள் பரப்பும் பதிவுகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.


இந்த நிலையில், உத்தரபிரதேசம் ''ஹயாத் நகரில் வசிக்கும் ஆசிப் அப்பாஸி என்பவர் ஒரு வாட்ஸ்அப் குழுவில் ராமர் குறித்த ஆட்சேபிக்கத்தக்க புகைப்படத்தை வெளியிட்டார், அதைத் தொடர்ந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்றிரவு அப்பாஸி கைது செய்யப்பட்டார்'' என ஹயாத் நகர் காவல் நிலைய அதிகாரி கூறினார்.


மேலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக இதுவரை 70 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 270-க்கும் அதிகமான நபர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர். 


https://www.hindutamil.in/news/india/524979-man-arrested-for-posting-objectionable-pic-of-lord-ram-on-whatsapp-group.html


Next Story