Top
undefined
Begin typing your search above and press return to search.

மயக்கமருந்து கொடுத்து தொடர் கூட்டு பலாத்காரம்; வீடியோ எடுத்து மிரட்டி திமுக பிரமுகர்கள் அடாவடி!

மயக்கமருந்து கொடுத்து தொடர் கூட்டு பலாத்காரம்; வீடியோ எடுத்து மிரட்டி திமுக பிரமுகர்கள் அடாவடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2019 12:13 PM GMT


பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை போன்ற ஒரு கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. இதில் முக்கிய குற்றவாளிகள் திமுக பிரமுகர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். (வயது 40). தச்சு தொழிலாளி. இவரின் முதல் மனைவி இறந்து விட்டார். இவர் தற்போது 26 வயதுடைய இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளும் அவர்களுடன் வசித்து வருகின்றனர்.


சங்கர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார். அப்போது விருகம்பாக்கத்தில் அவரது வீட்டின் அருகே உள்ள கோவிலில் விழா நடந்து உள்ளது. இந்த கோவில் பிரசாதம் என்று சொல்லி அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்கள் ஹரிஷ்குமார் (33), ரமேஷ்குமார் (30) ஆகியோர் சங்கரின் மனைவியிடம் கொடுத்துள்ளனர். அதனை சாப்பிடும் படி இருவரும் வற்புறுத்தி உள்ளனர்.


இவர்களின் உண்மை முகம் தெரியாமல், அவர் பிரசாதம்தானே என்று சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியவில்லை. மயக்கம் தெளிந்து பார்த்தபோது, ஆடைகள் அலங்கோலமாக இருந்துள்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தள்ளார்.





இந்த நிலையில் மறுநாள், சங்கரின் மனைவியை தொடர்பு கொண்ட ஹரிஷ்குமார், மயக்கமாக இருந்தபோது அவருடன் ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் உடலுறவு கொண்டதாகவும், அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலம் நிர்வாண நிலையில் போட்டோக்களும் எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதோடு அந்த வீடியோவையும் சங்கரின் மனைவியின் மொபைல் போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.


அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரின் மனைவி, என்ன செய்வதென்று தெரியாமல் துடித்து போய் உள்ளார். இந்த நிலையில் வீடியோவை தரவேண்டுமென்றால், பத்தாயிரம் ரூபாய் பணத்துடன் அம்பத்தூருக்கு உடனே வா என்று அழைத்து உள்ளார் ஹரிஷ்குமார்.


சங்கரின் மனைவியும் 10,000 ரூபாய் பணத்துடன் அப்த்தூருக்கு சென்றுள்ளார். அங்கு சங்கரின் மனைவியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, அவருக்கு குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்து உள்ளனர். அவரும் குளிர்பானத்தை குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார். அவரை ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் மேலும் அவர்களின் நண்பர் ஒருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனையும் ஒருவர் மாற்றி ஒருவராக வீடியோ பதிவு செய்துள்ளனர். போட்டோக்களும் எடுத்துள்ளனர்.


சங்கரின் மனைவி மயக்கம் தெளிந்தபிறகு “நாங்கள் அழைக்கும் போதெல்லாம் நீ வரவேண்டும். தாங்கள் கூறியபடி நீ கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னுடைய நிர்வாண போட்டோக்களையும், வீடியோக்களையும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம்” என்றுகூறி மிரட்டி உள்ளனர். அதோடு சங்கரின் மனைவி அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அனுப்பி உள்ளனர்.


இந்தநிலையில் வெளியூருக்கு சென்ற சங்கர் வீடு திரும்பியுள்ளார். அவர் தனது மனைவியின் கழுத்தில் தங்க சங்கிலி இல்லாமல் இருப்பதை பார்த்து, அது பற்றி விசாரித்துள்ளார். அதற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி சமாளித்துள்ளார். அதோடு அவரின் நடவடிக்கைகள் சரியில்லாமல் இருந்துள்ளது. இதற்கிடையில் மூன்று முறை சங்கரின் மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


இதனால், ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்று நினைத்த சங்கர், தொடர்ந்து மனைவியிடம் விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களை கணவர் சங்கரிடம் அவர் விவரித்துள்ளார்.


இதனால் பதறிப்போன சங்கர், இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல், பாலியல் பலாத்காரம் செய்த திமுக பிரமுகரான ஹரிஷ்குமார் மற்றும் ரமேஷ்குமாருக்கு சாதகமாகவே பேசியுள்ளனர்.


அவர்களிடம் நகைக்கு பதிலாக 90,000 ரூபாய் வாங்கி தருவதாகவும், இதற்குமேல் இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இல்லாவிட்டால், பலாத்காரம் செய்தது பற்றிய செய்தியை பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் கொடுத்துவிடுவோம் என்றும் சங்கரை மிரட்டி உள்ளனர். அதோடு மனைவியின் நடத்தை சரியில்லை என்று சொல்லி அவரை விவாகரத்து செய்துவிடு என்றும் சங்கருக்கு விருகம்பாக்கம் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த திமுக பிரமுகர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் சங்கர் எதுவும் செய்யமுடியவில்லை.


இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று முழு விபரத்தையும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் விருகம்பாக்கம் போலீசார் மீது குற்றம் சுமத்தியுள்ள மனுவை வாங்க முடியாது என்றும், அதற்குப் பதிலாக புதிய மனு எழுதிகொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதன்படி சங்கர் புதிய மனுவை எழுதிக் கொடுத்துள்ளார். அந்த மனுவை பெற்றுக் கொண்டுள்ளனர்.


இதைத்தொடர்ந்து இந்த மனு தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு துணை கமிஷனர் அசோக்குமார், இந்த மனுவை வடபழனி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


இதற்கிடையே இதுபற்றிய தகவல்கள் திமுக பிரமுகர்கள் ஹரிஷ்குமாருக்கும், ரமேஷ்குமாருக்கும் விருகம்பாக்கம் போலீசார் மூலம் பறந்துள்ளது. அந்த அளவுக்கு திமுகவினருக்கு போலீஸ் நிலையங்களில் செல்வாக்கு ஆட்சியில் இல்லாதபோதே கொடிகட்டி பறக்கிறது.


இதனால் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட ஹரிஷ்குமாரும், ரமேஷ்குமாரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இவர்களுக்கு, இது முதல் சம்பவம் அல்ல என்றும், இதுபோல பல பெண்களை இவர்கள் சீரழித்து உள்ளனர் என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த வழக்கு தொடர்பாக போலீசார் முறையான விசாரணையை மேற்கொண்டால், திமுக பிரமுகர்கள் ஹரிஷ்குமார் மற்றும் ரமேஷ்குமார் செய்த மேலும் பல காமலீலைகள் வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் பல பெரும்புள்ளிகளும் சிக்குவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.


பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள இந்த திமுக பிரமுகர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ள, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.


Next Story