Top
undefined
Begin typing your search above and press return to search.

நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை, என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் - மு.க.அழகிரி!

நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை, என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் -  மு.க.அழகிரி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2019 5:03 AM GMT


பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் வருகிற 15-ந் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர்களுக்கு எச்.ராஜா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தார். மு.க.அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்


.
 மு.க.அழகிரி இன்று காரைக்குடியில் உள்ள எச்.ராஜா இல்லத்துக்கு வந்தார். சிறிது நேரம் எச்.ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்த அவர் இதையொட்டி  15-ந் தேதி  வேறொரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், ஒரு நாள் முன்னதாகவே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வந்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் , அப்போது நிருபர்கள், தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.


அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.


Next Story