Top
undefined
Begin typing your search above and press return to search.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு, இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார் பிரேசில் அதிபர்!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு, இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார் பிரேசில் அதிபர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2019 6:59 AM GMT


பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம்  பிரேசில் சென்றடைந்தார்,அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய, பெரிய பொருளாதார நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ் ' என்ற அமைப்பை உருவாகியது, நா.இந்த அமைப்பின், 11வது கூட்டம், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. 


இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 



அப்போது,பிரேசிலுக்கு சுற்றுலா அல்லது தொழில் துவங்க வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். என்று சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story