Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை விவகாரத்தில் மரபு சார்ந்த விஷயங்கள் பரிசீலனை! உச்சநீதிமன்ற புதிய உத்தரவுக்கு பாஜக வரவேற்பு!

சபரிமலை விவகாரத்தில் மரபு சார்ந்த விஷயங்கள் பரிசீலனை! உச்சநீதிமன்ற புதிய உத்தரவுக்கு பாஜக வரவேற்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2019 8:51 AM GMT


சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு பக்தர்களின் உரிமையையும், மதநம்பிக்கையையும் உறுதிபடுத்தியுள்ளது என பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சந்தோஷ் கூறியுள்ளார்.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு கோவில் நடைமுறைகள் படி அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 4 புதிய ரிட் மனுக்கள் உள்ளிட்ட 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தனது உத்தரவை பிறப்பித்துள்ளது.



அதன்படி 5 அமர்வு கொண்ட நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம். சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி தற்போதைய நிலை தொடரும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.



இதுகுறித்து பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், சபரிமலை விவகாரம் 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பாஜக வரவேற்கிறது. எனவே சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு பக்தர்களின் உரிமையையும், மதநம்பிக்கையையும் உறுதிபடுத்தியுள்ளது. இந்த விவகாரம் என்பது அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டது அல்ல மாறாக காலம் காலமாக சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் மரபு சம்பந்தப்பட்டது என்று கூறியுள்ளார்.


Next Story