Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2019 5:43 AM GMT


தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்வதில்லை. இதை இந்து பெண்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர்.


இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக அனைத்து வயது பெண்களுக்கும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இது இந்துகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


ஆனால், கேரளாவில் ஆளும் பிணராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, உச்ச நீதி மன்ற தீர்ப்பை காரணம் காட்டி, கடவுள் நம்பிக்கை இல்லாத பெண்களையும், மாற்று மத பெண்களையும் சபரி மலைக்கு அனுப்பி இந்துக்களின் மனதில் தீராத ரணத்தை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாறு பரிசீலனை செய்ய சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனுவை, நாயர் சர்வீஸ் சொசைட்டி பீப்பிள் பார் தர்மா மற்றும் பல அமைப்புகள் இணைந்து தாக்கல் செய்தது. அயோத்தி வழக்கில் ராமனுக்காக வாதாடி ராமன் அருளால் வெற்றிவாகை சூடிய 92 வயது மூத்த வழக்கறிஞர் பராசரன் மற்றும் வைத்தியநாதன் இரண்டு பேரும் ஐயப்பனுக்காகவும் வாதாடினார்கள்.


அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் (14.11.2019) என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தீர்ப்பளித்தனர்.


Next Story