Top
undefined
Begin typing your search above and press return to search.

கருவில் பெண் குழந்தை இருப்பதை அறிந்து மனைவிக்கு முத்தலாக்!! கணவர் உட்பட 7 பேர் மீது கிரிமினல் வழக்கு

கருவில் பெண் குழந்தை இருப்பதை அறிந்து மனைவிக்கு முத்தலாக்!! கணவர் உட்பட 7 பேர் மீது கிரிமினல் வழக்கு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2019 5:31 AM GMT


பீகார் மாநிலம் முசாபர் நகரில் உள்ள சாப்ரா பகுதியில் வசித்து வருபவர் காலிப். இவருக்கும் ஃபர்சானா என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இடையே 2 பெண் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன் ஃபர்சானா கர்ப்பம் அடைந்தார். கணவர் காலிப் மனைவியின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து பார்த்தார். கருவில் இருப்பது பெண் என்று தெரிந்ததும் அதை கலைக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளார்.


ஆனால் சிசு வளர்ந்து விட்டதால் ஃபர்சானா கர்ப்பத்தை கலைக்க மறுத்து விட்டார். இதனால் கோபம் அடைந்த கணவரும், குடும்பத்தினரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காலிப் 3 முறை தலாக் கூறி மனைவியை விவாக ரத்து செய்து விட்டார். இதனால் மேலும் வேதனை அடைந்த ஃபர்சானா சென்ற புதன்கிழமை (நவம்பர் 13) காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, கணவர் உட்பட அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


சென்ற ஆகஸ்ட் 1 ம் தேதி மோடி அரசு பாராளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) சட்டம், 2019 ஐ நிறைவேற்றியது, அது முதல் முத்தலாக் ஒரு கிரிமினல் குற்றமாக மாறியுள்ளதை அடுத்து நாடெங்கும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் நிவாரணம் பெறுவதுடன் பாதுகாப்பான வாழ்க்கையை பெற இந்த சட்டம் உதவி வருகிறது.  


https://swarajyamag.com/insta/bihar-man-forces-wife-to-abort-girl-child-after-prenatal-test-reveals-gender-then-hands-her-triple-talaq


Next Story