Top
undefined
Begin typing your search above and press return to search.

திணிக்கப்படும் செய்திகளால் “ஊடகங்களின் மதிப்பு, மரியாதை போச்சு” - வெங்கையா நாயுடு வேதனை!

திணிக்கப்படும் செய்திகளால் “ஊடகங்களின் மதிப்பு, மரியாதை போச்சு” - வெங்கையா நாயுடு வேதனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2019 8:39 AM GMT


பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் செய்தியை செய்தியாக கூறாமல் பரபரப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் தங்கள் விருப்பத்துக்கு செய்திகளை திணிக்கின்றன. இதனால் மக்களிடையே ஊடகங்களின் மதிப்பு குறைந்து வருவதாக துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வேதனையுடன் கூறினார்.


இந்திய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் செய்திகள் என்பது செய்திகளை சொல்வதற்காக சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது. அது செய்திக்கு புதிய விளக்கத்தை சொல்வதாகவோ அல்லது தவறான ஒரு விளக்கத்தை சொல்வதாகவோ இருந்ததில்லை. ஆனால் தற்போது செய்திகள் மற்றும் கண்ணோட்டம் திணிக்கப்படுவதாக உள்ளது. அது தான் பிரச்னையே. பரபரப்பை ஏற்படுத்துவதையே மரபாக கொண்டு இன்றைய நாளில் பத்திரிக்கைகளின் போக்கு மாறி உள்ளது.


"சென்ஷேசனல் நியூஸ்" (sensational news) என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ( senseless news) ஆக தான் உள்ளது. வணிக குழுக்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக டிவி சேனல்கள் மற்றும் செய்திதாள்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பத்திரிக்கைகளின் நன்மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


Next Story