Top
undefined
Begin typing your search above and press return to search.

முரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ஆம் தேதி, தேசிய பட்டியலின ஆணையம் முன்பு, தலைமை செயலாளர், தடா பெரியசாமி ஆஜர்! முரசொலி இடம் மீட்க்கப்படுமா?

முரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ஆம் தேதி, தேசிய பட்டியலின ஆணையம் முன்பு, தலைமை செயலாளர், தடா பெரியசாமி ஆஜர்! முரசொலி இடம் மீட்க்கப்படுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2019 12:23 PM GMT


திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.


இதன்மூலம் இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது. அது பஞ்சமி நிலம் இல்லை என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் ஆதாரம் என்ற பெயரில் சிலவற்றை வெளியிட்டார். அதில் மூல பத்திரம் இல்லை. அந்த இடம் பஞ்சமி நிலமா அல்லது வேறு நிலமா என்பதை நரூபிக்க தேவையானவே மூல பத்திரம்தான்.


இதனால் எதிர் தரப்பினர் அது பஞ்சமி நிலம் இல்லை என்றால் முரசொலி அலுவலகத்தில் மூல பத்திரத்தை வெளியிடுங்கள் அல்லது முரசொலி அலுவலகத்தை அங்கிருந்து காலி செய்யுங்கள் என்று தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இதை திசை திருப்புவதற்காக, மணப்பாறை ஆழ்துணை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் விவகாரம், டாக்டர்கள் ஸ்டிரைக், சென்னை ஐஐடி மாணவி தற்கொலை போன்று ஒவ்வொரு விவகாரமாக ஸ்டாலின் கையில் எடுத்து வருகிறார். இருப்பினும் முரசொலி மூலப்பத்திரத்தை கேட்பதை ஒருவரும் மறக்கவும் இல்லை, நிறுத்தவும் இல்லை.


இந்த நிலையில் தலித் சமுதாய முக்கிய தலைவரும், தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினருமான தடா பெரியசாமி, முரசொலி அமைந்துள்ளது பஞ்சமி நிலம்தான் என்பதை உறுதி படுத்தினார்.


இதுதொடர்பாக அவர் கூறும்போது,”ஸ்டாலின், வெளியிட்டுள்ள பட்டா 1985-ஆம்ட ஆண்டுக்கானது. 1923-ஆம் ஆண்டு, நிரந்தர கணக்கு பதிவேடு (Permanent Register), RSR (Re-settlement Paisal Register), SLR (Settlement Land Register) மற்றும் 1935 –ஆம் ஆண்டின் Gazette Copy ஆகியவற்றில் மேற்படி சர்வே எண் பற்றி தெரிந்து கொண்டு, ஸ்டாலின் பேசவேண்டும். முதலில் ஒரு தலித்துக்கு சொந்தமாக இருந்து, பிறகு இரண்டு தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றப்பட்டு, 4-வதாகத்தான் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு வாங்கியுள்ளனர். 1985-ஆம் ஆண்டு ஆவணத்தின் மூலத்தை காண்பிப்பேன் என்பது வாய்சவடாலே” என்றார்.


மேலும், வருகிற 19-ஆம் தேதி தேசிய பட்டடியலின ஆணையத்தின் முன் ஆஜராகி தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.


இதுதொடர்பாக தடா பெரியசாமி தனது டுவிட்டர் பதிவில், ”முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய ஆவணங்களை வருகிற 19-11-2019 அன்று நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு NCSC நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அன்று நேரில் ஆஜராகி தங்களுடைய வாதத்தை வைக்கலாம் என்று NCSC எனக்கும் அழைப்பு விடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/tadaperiyasami/status/1195372605479350273?s=21


இதனால் முரசொலி இடம் பஞ்சமி நிலம்தான் என்பதற்கான ஆதாரங்கள், தேசிய பட்டியலின ஆணையத்திடம் வழங்கப்பட உள்ளது. இதற்குப் பிறகுதான் முரசொலி இடம் மீட்கப்படுமா என்பது தெரிய வரும்.


Next Story