Top
undefined
Begin typing your search above and press return to search.

அவரு முகத்த கூட நான் பார்த்தது கிடையாதுங்க!! உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த நடிகை ஸ்ரீ ரெட்டி.!

அவரு முகத்த கூட நான் பார்த்தது கிடையாதுங்க!! உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த நடிகை ஸ்ரீ ரெட்டி.!

MuruganandhamBy : Muruganandham

  |  16 Nov 2019 9:10 AM GMT


சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி உதயநிதி ஸ்டாலின் குறித்து மிகவும் சர்ச்சையான விஷயம் ஒன்றே பதிவிட்டிருந்தார் .அதில், தமிழ் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சார். மூன்று வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்தில் நடைபெற்ற கதிர்வேலன் காதல் படத்தின் சூட்டிங் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாமிருவரும் நடிகர் விஷால் ரெட்டி மூலமாக சந்தித்தோம். நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். அதன் பின்னர் கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும் நீங்கள் என்னுடன் உறவில் இருந்தீர்கள். அதன் பின்னர் நாம் இருவரும் நிறைய செய்து இருக்கிறோம்


ஆனால், இதுவரை எனக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை நான் கண்டிப்பாக என்னுடன் நீங்கள் இருந்ததை மறக்க மாட்டேன் நீங்கள் மிகவும் சிறந்தவர் சார் என்று நீங்கள் என்று பதிவிட்டுள்ளார். விரைவில் இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி விளக்கமாக கூறுவதாக தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் திடீரென்று "உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு, எனது கணக்கு இல்லை போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும், வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன், மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்" என்று கூறி உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள், இயக்குனர்கள் பற்றி தைரியமாக பொதுவெளியில் சொன்னவர், உதயநிதியை பற்றி கூறிய சிறிது நாட்களிலேயே இப்படி மறுப்பது தெரிவித்து பேசியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story