Kathir News
Begin typing your search above and press return to search.

அனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை

அனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை

அனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Nov 2019 3:40 AM GMT


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது இக்கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.



இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி , நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் பிரகலாத் ஜோஷி ஏற்பாட்டின் பேரில் இன்று மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது


Next Story
கதிர் தொகுப்பு
Trending News