Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் நிகழ்ச்சிகள் எதிரொலி: மாமல்லபுரத்தை காண 2 இலட்சம் சீன சுற்றுலா பயணிகள் விசா கேட்டு மனு

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் நிகழ்ச்சிகள் எதிரொலி: மாமல்லபுரத்தை காண 2 இலட்சம் சீன சுற்றுலா பயணிகள் விசா கேட்டு மனு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2019 4:45 AM GMT


நரேந்திர மோடி நம்
நாட்டின் பிரதமர் ஆவதற்கு முன்பாக முன்பிருந்த அரசுகள் பிரபலமான வெளிநாட்டு
தலைவர்கள் இந்தியா வந்தால் அனைத்து நிகழ்ச்சிகளையும் தலைநகரமான டெல்லியில் உள்ள 5
நட்சத்திர ஹோட்டல்களிலேயே வைத்துக் கொள்வார்கள்.


அருகே உள்ள
ஆக்ராவுக்கு மட்டும் அவர்களை அழைத்துச் சென்று சுற்றிக் காட்டிவிட்டு வழி அனுப்பி
வைப்பார்கள். இதனால் உலக மக்களின் பார்வை இந்தியா என்றாலே டெல்லி, ஆக்ராதான் என்று மட்டும்
தான் என இருந்தது. டெல்லிக்கு அப்பால் உள்ள சிறப்புக்கள் உலக நாடுகளின் பார்வைக்கு
தெரியாமல் இருந்தது. இதனால் சுற்றுலா தொழிலும் ஆக்ராவை தவிர வேறங்கும் பெரிதாக
வளரவில்லை.


இந்த நிலையில்,பிரதமராக
மோடி பதவி ஏற்ற பிறகு மிகப்பெரிய தலைவர்கள் உடனான நிகழ்ச்சியை இந்தியாவுக்கு
பெருமை சேர்க்கும் மற்ற பாரம்பரிய நகரங்களை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார். குஜராத்தில்
உள்ள சபர்மதி ஆசிரமம், காசி கோவில் மற்றும் கங்கை நதிப்புற இயற்கை அம்சங்களை
வெளியுலக பார்வைக்கு கொண்டு வந்தார்.


அந்த வகையில் பிரதமர்
மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான உச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை இந்திய வரலாற்றுச்
சிறப்பு மிக்க சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடத்திக் காட்டினார்.


இந்த சம்பவங்களை உலக
நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலைக் காட்சிகள் மூலம் கண்டு களித்தனர்.
இதனால் மாமல்லபுரத்தின் புகழும், அங்குள்ள பெருமை தரும் அம்சங்களும் உலக மக்களை
வியந்து பார்க்க வைத்தன. இதனால் மாமல்லபுரம் வரும் உலக சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை மற்றும் உள் நாட்டு பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.


குறிப்பாக சீன நாட்டு
மக்கள் இந்தியா வந்து மாமல்லபுரம் கடல் அழகு மற்றும் சிற்பங்கள் மற்றும்
குகைக் கோவில்கள் அழகை பார்க்க விரும்புகிறார்கள் என்றும், தற்போதுவரை 2 லட்சம் சீன சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வர விசா கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், இன்னும்
2 மாதங்களில் 2
லட்சம் சீன நாட்டுப் பயணிகள் இங்கு வர உள்ளதாகத் தகவல் வந்துள்ளதாக சுற்றுலாத்
துறை தெரிவித்துள்ளது.


இங்கு வரும் சீன
சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான முறையில் வழி காட்ட வசதிகள் ஏற்படுத்தும் வகையில்
வழிகாட்டிகளுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் 120 வழிகாட்டிகளுக்கான
சிறப்பு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாமல்லபுரத்தில்
நடைபெற்றது. அப்போது மேற்கண்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story