Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய பாதுகாப்புத்துறை ஏற்றுமதி பொருள்கள் 2 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரிப்பு

இந்திய பாதுகாப்புத்துறை ஏற்றுமதி பொருள்கள் 2 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரிப்பு

இந்திய பாதுகாப்புத்துறை ஏற்றுமதி பொருள்கள் 2 ஆண்டுகளில் 6  மடங்கு அதிகரிப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2019 7:44 AM GMT


6-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் பாங்காக்கில் இன்று திங்கள்கிழமைநடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஏடிஎம்எம்-பிளஸ் நாடுகளின் 17 பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,


2024-ஆம் ஆண்டில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை முன்னெடுக்கும். 'மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ் பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-ஆவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. 2014-18 ஆண்டுகளுக்குள்ளாக 9.5 சதவீத ஆயுத இறக்குமதி நடைபெற்றுள்ளது.


இந்தியாவின் 2019-20 நிதியாண்டில் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு 60 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் தோராயமாக 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு பொருட்கள் உள்நாட்டு தனியார் துறைகளால் தற்போது தயாரிக்கப்படுகின்றன.


பாதுகாப்பு உற்பத்தி கொள்கை 2018 வரைவு-ன் படி 2025-ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு லட்சியமாக இருந்தாலும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது ஊக்கமளிக்கிறது.


2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தயாரிப்பு 26 பில்லியன் அமெரிக்க டாலரை அடைவதற்கு இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News