Kathir News
Begin typing your search above and press return to search.

சிவசேனாவை “வெச்சி செஞ்ச” சரத்பவார் – சோனியா கூட்டணி! நட்டாற்றில் உத்தவ் தாக்கரே!

சிவசேனாவை “வெச்சி செஞ்ச” சரத்பவார் – சோனியா கூட்டணி! நட்டாற்றில் உத்தவ் தாக்கரே!

சிவசேனாவை “வெச்சி செஞ்ச” சரத்பவார் – சோனியா கூட்டணி! நட்டாற்றில் உத்தவ் தாக்கரே!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2019 10:10 AM GMT


மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி அரசு அமையும் என்றுதான்
அனைவரும் எதிர்பார்த்தனர்.


ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. எடுத்த எடுப்பிலேயே தனது மகன் ஆதித்ய தாக்கரேவை
முதல்வர் ஆக்க வேண்டும் என்று அறிவித்தார்.
மேலும் 50 சதவீத அமைச்சர்களையும் சிவசேனாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவு
போட்டார்.


அனுபவம் எதும் இல்லாத 29 வயது ஆதித்ய தாக்கரேவை மிகப்பெரிய மாநிலமான
மகராஷ்டிராவிற்கு முதல்வர் ஆக்குவதில் பாஜகவிற்கு உடன்பாடில்லை. மக்களும் இதை
விரும்பவில்லை. மேலும் பாஜக வென்ற 105 இடங்களில், பாதி இடங்களை கைப்பற்றிய (56
இடங்கள்) சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதே அதிகம்தானே? இருந்தாலும்,
இதையும் தாண்டி சிவசேனாவிற்கு துணை முதல்வர் பதவி கொடுக்க பாஜக முன்வந்தது.


ஆனால் தன் மகனை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தே தீரவேண்டும் என்பதில்
உத்தவ் தாக்கரே விடாபிடியாக இருந்தார். இதுதான் அவரது தந்தை பால் தாக்கரே
உருவாக்கிய சிவசேனாவுக்கு பால் ஊற்றப்போகிறது என்பதை அவர் யோசிக்க வில்லை. பதவி
வெறி அவரை தங்களின்பரம எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன்
கைகோர்க்க வைத்தது.


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆசைக்காட்டினார். காங்கிரசும் தூபம்
போட்டது. இவர்களின் ஆதரவுடன் மகனை அரியணை ஏற்றியே தீருவது என்று பாஜகவுடனான 35 கால
கொள்கை கூட்டணியை புதைத்தார் உத்தவ் தாக்கரே.


சிவசேனாவின் 56 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரசின் 54 எம்எல்ஏக்களும், காங்கிரசின் 44 எம்எல்ஏக்களும் சேர்ந்து மொத்தம் 154 எம்எல்ஏக்களின்
ஆதரவு உள்ளதால் பாலகனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்தார்
உத்தவ் தாக்கரே. சரத்பவாரின் பேச்சைக் கேட்டு நரேந்திர மோடி அரசில் அங்கம் வகித்த
சிவசேனாவின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்தை ராஜினாமா செய்ய வைத்தார் உத்தவ்
தாக்கரே.


உத்தவ் தாக்கரேக்கு ஆசை
காட்டிய சரத்பவார், முதலில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள் என்றார். அவரின்
சூட்சுமத்தை புரிந்துகொள்ளாத உத்தவ் தாக்கரே, உடனே வெளியேறினார். அதோடு
பாஜகவையும், அதன் தலைவர்களையும் சகட்டு மேனிக்கு வசைபாடினார்.


ஆனால் சரத்பவார் தனது
அடுத்தகட்ட நாடகத்தை அரங்கேற்றினார். காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நாடக்கிறது,
நடத்துகிறேன், நடத்துகிறேன் என்று காலத்தை கடத்தினார். சரத்பவாரும், சோனியா
காந்தியும் சந்திக்கவும் இல்லை சிவசேனாவுக்கு ஆதரவு என்று அறிவிக்கவும் இல்லை.


இப்போதுதான் உத்தவ்
தாக்கரே, சரத் பவாரும், சோனியாவும் தனது முதுகில் குத்தியதை உணர்ந்தார். அரசனை
நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக உத்தவ் தாக்கரே இப்போது நடுவீதியில் நிற்கிறார்.
அவர் மட்டுமல்ல சிவசேனா கட்சி எம்எல்ஏக்களும், எம்பிக்களும், நிர்வாகிகளும்,
தொண்டர்களும் உள்ளனர்.


இந்த நிலையில் இன்று
(18.11.2019) பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற
சரத்பவார், நிருபர்களிடம் கூறும்போது,”சிவசேனாவும், பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள். தேசியவாத
காங்கிரசும், காங்கிரசும் இணைந்து போட்டியிட்டோம். அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செல்லட்டும். நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்" என்றார்.




https://twitter.com/ANI/status/1196315747372285952


இதன் மூலம், சிவசேனாவை
நட்டாற்றில் தள்ளிவிட்டதை உறுதிபடுத்தியுள்ளார் சரத்பவார். இதற்கு சோனியாவின்
ஆலோசனையும் உண்டு.


இதனால் அதிர்ந்து போன
உத்தவ் தாக்கரே, ஏற்கனவே திட்டமிட்டிருந்த அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திக்கு முக்காடி வருகிறார்.


ஒரு காலத்தில்
பாஜகவைவிட பெரிய கட்சியாக மகாராஷ்டிராவில் வலம் வந்த சிவசேனா, பால்தாக்கரேயின்
காலத்திற்கு பிறகு மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது. பாஜக தயவால் அந்த கட்சி
மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தில் வலம் வந்தது. அதற்கும் இப்போது
முடிவுரை எழுதப்பட்டுவிட்டது.


சிவசேனாவுக்கு ஆசையை
காட்டி அதனை மோசம் செய்ததற்கு சரத்பவாரும், சோனியாவும் ஆயிரம் காரணங்களைக்
கூறலாம். ஆனால் இந்துக்களின் பாதுகாவலன் என்று சுய தம்பட்டம் அடித்துவந்த உத்தவ்
தாக்கரே, கிறிஸ்தவ – முஸ்லிம் ஓட்டுக்காக தொடர்ந்து இந்துக்களை வஞ்சித்து வந்த
காங்கிரஸ் கும்பல்களுடன் கள்ளதொடர்பை வைத்தாரே, அதற்கு அவர் என்ன காரணத்தை
சொல்லப்போகிறார் என்கின்றனர் மராட்டிய மக்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News